ப்ளூ சட்டை மாறன் என்ன படம் எடுத்து கிழிப்பாரு.. திருடா திருடி இயக்குநரின் அதிரடி பேட்டி!

சென்னை: விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் வரும் டிசம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

Recommended Video

Blue Sattai Maran என்ன படம் எடுத்து கிழிப்பாரு | Anti Indian, Subramaniya Shiva Interview

இந்த படத்தின் ப்ரிவ்யூ ஷோ சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த திருடா திருடி பட இயக்குநர் சுப்பிரமணியம் சிவா அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிழித்துத் தொங்கவிடும் விமர்சகர்

கிழித்துத் தொங்கவிடும் விமர்சகர்

கமர்ஷியல் படங்களையும் கமர்ஷியல் ஹீரோக்களையும் கிழித்துத் தொங்கவிடும் விமர்சகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன். அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் பல தடைகளை கடந்து ரிலீசாக காத்திருக்கிறது.

தடை செய்யப்பட்ட படம்

தடை செய்யப்பட்ட படம்

தணிக்கை குழு இந்த படத்தை பார்த்து விட்டு இந்த படத்துக்கு எந்தவொரு சான்றிதழும் வழங்க முடியாது என்றும் இந்த படம் வெளியாகக் கூடாது என முற்றிலுமாக தடை செய்தது. அந்த அளவுக்கு அரசியல் நய்யாண்டி கருத்துக்களும், மதம் மற்றும் ஜாதிய சண்டைகளுக்கு எதிரான கருத்துக்களும் இந்த படத்தில் உள்ளது. தணிக்கை குழு தடை செய்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி வென்ற படக்குழு படத்தை வரும் டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.

சுப்பிரமணியம் சிவா பேட்டி

சுப்பிரமணியம் சிவா பேட்டி

தனுஷின் திருடா திருடி, சீடன், ஜீவாவின் பொறி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் இந்த ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் உருவான வெள்ளை யானை திரைப்படம் வெளியானது. சமீபத்தில் ஆன்டி இண்டியன் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்து விட்டு தனது கருத்தை அவர் முன் வைத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

என்ன படம் எடுத்து கிழிப்பாரு

ப்ளூ சட்டை மாறன் பெருசா என்ன படத்தை எடுத்து கிழிப்பாரு என்றே ஏகப்பட்ட பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்கள் அடங்கிய பாடமாக இந்த ஆன்டி இண்டியன் திரைப்படத்தை இளமாறன் இயக்கி உள்ளார். சாதி, மதங்களை சொல்லி சண்டை போடக் கூடாது என்றும் மனிதத்துடன் மனிதர்கள் வாழ வேண்டும் என்கிற தத்துவம் இந்த படத்தில் அடங்கி உள்ளது என தனது கருத்தை முன் வைத்துள்ளார் சுப்பிரமணியம் சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X