Don't Miss!
- News
அக்கப்போர் காங். ஒரே ஒரு ராஜ்யசபாசீட்- முட்டி மோதும் 12 பேர்! மேலிடத்துக்கு பறந்த 500 இ மெயில்கள்!
- Automobiles
இந்த கார்களை வாங்குனா பெட்ரோல் பத்தி கவலையே வேண்டாம் செம மைலேஜ் தரும்....
- Technology
ரகசியமா ஒரு இன்ஸ்டா கணக்கு வச்சுருக்கோம்ல., அதில் தான் அது எல்லாமே: இந்தியருக்கு பதிலளித்து மாட்டிய மஸ்க்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட முயற்சிக்கவும்...
- Finance
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?
- Sports
வாட்ச்-க்கு ஆசைப்பட்டு ரூ.2.5 கோடி அபேஸ்.. மோசடி வழக்கில் ரிஷப் பண்ட்.. அப்படி என்ன நடந்தது!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்ளூ சட்டை மாறன் என்ன படம் எடுத்து கிழிப்பாரு.. திருடா திருடி இயக்குநரின் அதிரடி பேட்டி!
சென்னை: விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் வரும் டிசம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ப்ரிவ்யூ ஷோ சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த திருடா திருடி பட இயக்குநர் சுப்பிரமணியம் சிவா அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அகோரி போல மாறிய நடிகர் அசோக்செல்வன்... லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

கிழித்துத் தொங்கவிடும் விமர்சகர்
கமர்ஷியல் படங்களையும் கமர்ஷியல் ஹீரோக்களையும் கிழித்துத் தொங்கவிடும் விமர்சகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன். அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் பல தடைகளை கடந்து ரிலீசாக காத்திருக்கிறது.

தடை செய்யப்பட்ட படம்
தணிக்கை குழு இந்த படத்தை பார்த்து விட்டு இந்த படத்துக்கு எந்தவொரு சான்றிதழும் வழங்க முடியாது என்றும் இந்த படம் வெளியாகக் கூடாது என முற்றிலுமாக தடை செய்தது. அந்த அளவுக்கு அரசியல் நய்யாண்டி கருத்துக்களும், மதம் மற்றும் ஜாதிய சண்டைகளுக்கு எதிரான கருத்துக்களும் இந்த படத்தில் உள்ளது. தணிக்கை குழு தடை செய்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி வென்ற படக்குழு படத்தை வரும் டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.

சுப்பிரமணியம் சிவா பேட்டி
தனுஷின் திருடா திருடி, சீடன், ஜீவாவின் பொறி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் இந்த ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் உருவான வெள்ளை யானை திரைப்படம் வெளியானது. சமீபத்தில் ஆன்டி இண்டியன் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்து விட்டு தனது கருத்தை அவர் முன் வைத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.
என்ன படம் எடுத்து கிழிப்பாரு
ப்ளூ சட்டை மாறன் பெருசா என்ன படத்தை எடுத்து கிழிப்பாரு என்றே ஏகப்பட்ட பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்கள் அடங்கிய பாடமாக இந்த ஆன்டி இண்டியன் திரைப்படத்தை இளமாறன் இயக்கி உள்ளார். சாதி, மதங்களை சொல்லி சண்டை போடக் கூடாது என்றும் மனிதத்துடன் மனிதர்கள் வாழ வேண்டும் என்கிற தத்துவம் இந்த படத்தில் அடங்கி உள்ளது என தனது கருத்தை முன் வைத்துள்ளார் சுப்பிரமணியம் சிவா.