500 கோடி, 1000 கோடி வசூல்.. ஹீரோவுக்காக சொல்லும் பொய்.. உண்மையை உடைத்த சுந்தர் சி!
சென்னை: இயக்குநர் சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில், படத்தின் படிப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு சுந்தர் சி அளித்துள்ள பேட்டியில், ஒரு படம் ஆயிரம் கோடி வசூல், 500 கோடி வசூல் என்று சொல்வது எல்லாம் பொய், ஹீரோக்களுக்காக தயாரிப்பாளர் செய்யும் வேலை என வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதில், தமிழ் சினிமாவில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஹீரோகிட்ட போய் ஒரு கதையை சொல்லி அவர் ஓகே சொன்னாத்தான் படத்தை இயக்கமுடியும் என்கிற நிலைமை தற்போது இருக்கு. ஒரு ஹீரோவை தேடி கண்டுபுடிச்சி அவர்கிட்ட கதையை சொல்லித்தான், நான் இயக்குநர் ஆகவேண்டும் என்றால், அப்படி நான் இயக்குநராக வேண்டிய தேவையே இல்லை. ரஜினி, கமல் சார் படத்தில் வேலை செய்யும் போது, நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொன்னார்கள். அதன் பிறகு தான், அது என்ன கதை என்பதையே நாங்க சேர்ந்து பேசுனோம். ஆனால், அப்போது ஒரு ஹீரோகிட்ட போய் கதை சொல்லி, அவர் ஓகே சொன்னாதான், படம் எடுக்க முடியும் என்றால், இத்தனை வருஷமா சினிமாவில் இருந்து, இத்தனை வெற்றிப்படத்தை கொடுத்து என்ன யூஸ், அப்படி ஒரு படம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்றார்.

எல்லாமே பொய்: தொடர்ந்து பேசிய சுந்தர் சி, ஒரு படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ 500 கோடி, ஆயிரம் கோடி வசூல் என்று சொல்வது எல்லாம் சுத்த பொய். எல்லா படமும் 500 கோடி, 600 கோடி, ஆயிரம் கோடி எல்லாம் வசூலிக்காது. மார்க்கெட் சைஸ்க்கு ஒரு லிமிடேஷன் இருக்கிறது. ஏதோ ஒன்னு ரெண்டு படம் தான் அந்த மாதிரி ஓடி வசூலை அள்ளும், முதல் வாரத்தில் 100 கோடி தாண்டி விட்டோம், இரண்டாம் வாரத்தில் இரண்டு 200 கோடி, இந்த படம் 500 கோடி கலெக்சன் என்று சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. தயாரிப்பாளர் அந்த ஹீரோவுடன் அடுத்த படம் பண்ண வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். அதோடு அந்த ஹீரோவும் ஹைப்பை ஏற்ற பார்க்கிற வேலை. உண்மையில் ஒரு கிரியேட்டருக்கு ஒரு இன்டென்ஷனா தான் அந்த பிராசஸ் இருக்கும். நாம் ஒரு படம் பண்ணுகிறோம் அந்த படம் நல்லபடியாக ஆடியன்சை ரீச் செய்யணும். ஆடியன்ஸ்க்கு படம் பிடித்திருந்தால் அது போதும். மற்றபடி வசூல் பற்றி எல்லாம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் சுந்தர் சிக்கு இந்த ஆண்டு தொடக்கமே நன்றாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும், 12 வருஷமாக வெளியாகாமல் இருந்த மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அந்த படத்தை தொடர்ந்து கடந்த வாரம் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











