சும்மா இருந்தவருக்கு ஹிட் கொடுத்தேன்.. சுந்தர் சியை தொந்தரவு செய்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

சென்னை: ஒரு நடிகரை வைத்து ஹிட் கொடுத்து மீண்டும் அவருடன் 2வது படத்தில் பணிபுரிந்தேன். ஆனால், அவருடன் நடந்த கசப்பான உணர்வு என்னை மிகவும் மனவிரக்தி அடைய வைத்தது. இனிமேல் அந்த நடிகருடன் பணியாற்றவே கூடாது என்ற அளவிற்கு கடுப்பேத்தி விட்டார் என இயக்குநர் சுந்தர் சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியை பார்த்த பலரும் யார் அந்த நடிகர் என சமூகவலைதளத்தில் தேட தொடங்கியுள்ளனர்.

அரண்மனை 4 படத்திற்கு பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் படம் கேங்கர்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். வின்னர், கிரி, தலைநகரம், மாநகரம், படத்தை போன்று இப்படத்திலும் வடிவேலு காமெடி படுஜோராக இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைல் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. வடிவேலு சீரியஸான படங்களில் நடித்து வந்தாலும் சுந்தர் சி - வடிவேலு காம்போவில் வெளியானால் காமெடி சரவெடியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கேங்கர்ஸ் படத்திற்கான புரோமோஷன் பணிகளில் சுந்தர் சி, வடிவேலு இணைந்து பேட்டி அளித்து வந்தனர்.

Director Sundar C spoke about his experience of acting in the film thalainagaram

மனம் நொந்து போன சுந்தர் சி: இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு சுந்தர் சி அளித்த பேட்டியில் பெயர் குறிப்பிடாமல் ஒரு நடிகர் குறித்து மனம் நொந்து பேசியிருந்தார். இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ஒரு நடிகரை வைத்து இரண்டாவது படம் இயக்கினேன். ஆனால், முதல் படத்தில் நடித்தபோது பந்தா காட்டாதவர் இரண்டாவது படத்தில் நடிக்கும்போது அவருக்கு மார்க்கெட் நல்லவிதமாக இருந்ததால் ரொம்ப ஆட்டிட்யூட் காமிக்க ஆரம்பிச்சுட்டாரு. என்னடா இது இப்படி பண்றாருன்னு நானும் எனது உதவி இயக்குநர்களும் பேசிக்கொண்டோம். சும்மா இருந்தவரை நடிக்க வைத்து ஹிட் கொடுத்தது தப்பா போச்சு என்ற அளவிற்கு நினைக்க வைத்துவிட்டதாகவும் சுந்தர் சி சோகத்துடன் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு சீனும் எடுக்கும்போதும் 100 முறை கேள்வி கேட்டு தொந்தரவு செய்ததை பார்த்து படம் எடுக்கும் ஆசையே போச்சு என்றும் தெரிவித்துள்ளார். விருப்பமே இல்லாமல் அந்த படத்தில் பணியாற்றினேன் என தெரிவித்தார்.

Director Sundar C spoke about his experience of acting in the film thalainagaram

தலைநகரத்தில் நடிகர் ஆனேன்: அந்த சமயத்தில் தான் எனது உதவி இயக்குநர் சுந்தர் சி படத்திற்காக இறங்கி வேலை பார்த்தேன். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் தலைநகரம் படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். பல நடிகர்களை கேட்டு பார்த்தார் யாரும் நடிக்க முடியாது என தெரிவித்தனர். பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இப்படி யாரும் நடிக்காமல் போனால், இந்த படத்தில் நானே நடிக்கிற மாதிரி இருக்கும் என்று விளையாட்டாக பேசியதை கேட்டு நீங்களே நடிங்க என்று தெரிவித்தார். எனக்கு ஒன்றும் புரியலை. விளையாட்டாக நடிக்க வந்து இன்றுடன் 20 வருடங்கள் ஆகிவிட்டது என சுந்தர் சி தெரிவித்துள்ளார். மேலும், சுந்தர் சி கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன் போன்ற நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில் எந்த நடிகர் சுந்தர் சியை தொந்தரவு செய்திருப்பார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். கிரி படத்திற்கு பிறகு சின்னா என்ற படத்தில் அர்ஜூன் நடித்தார். இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார் ஒரு வேளை அவரா இருக்குமோ என்று யூகிக்க தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X