மனோஜுக்காக கழுத்தில் இருந்த நகையை கழட்டி தந்த மனைவி.. கடைசி நேரத்தில் கூடவே இருந்தான்.. பிரபலம்!

சென்னை: தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். 48 வயதில் அவரின் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருந்த மனோஜ் பலவிதமான அவமானத்தை சந்தித்தார் என்று, மனோஜின் நண்பரான இயக்குநர் சுசீந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. அதில் சிம்புவை ஹீரோவாக வைத்து படம் எடுக்க நினைத்தார். அந்த படத்தை மட்டும் மனோஜ் எடுத்து இருந்தால், அவருடைய சினிமா வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்கும். அது முடியாமல் போனது மனோஜின் மிகப்பெரிய வருத்தம். பலர் சொல்வார்கள் பாரதிராஜா பையனுக்கு என்னப்பா... அவரிடம் இல்லாத சொத்தா, அவர் அப்பா நினைத்தால், இவரை இயக்குநராக்க முடியாதா என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு மட்டுமே என்ன பிரச்சனை என்பது தெரியும்.

Manoj bharathiraja suseenthiran

இயக்குநர் சுசீந்திரன்: பாண்டியநாடு படத்தின் போது தான் பாரதிராஜாவுடன் எனக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. 2012ஆம் ஆண்டிலிருந்து நான் அவருடன் பயணித்து வருகிறேன். அவுரே நினைத்தாலும், ரெண்டு கோடி ரூபாயில் படத்தை தயாரிக்க முடியாது. அதுதான் பாரதிராஜாவின் உண்மையான நிலை. இதனால், தான் மனோஜ் பாரதிராஜாவை பிரேக் செய்துவிட்டு இயக்குனராக நினைத்தார். உண்மையில் மனோஜ் இயக்குனர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் இயக்குனராக வேண்டும் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதன் பிறகு, பாரதிராஜாவிடம் பேசி பேசி தான், பாரதிராஜா, மனோஜ் இயக்குனராக படம் எடுப்பதற்கு ஒத்துக்கொண்டார். அதன் பிறகு தான் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார்.

மனோஜூக்கு நண்பர்கள் யாருமே இல்லை, எல்லா விஷயத்தையும் அவர் தனது மனைவியிடம் மட்டும் தான் பகிர்ந்து கொள்வார். அதே போல, கவின் என்ற உதவியாளர், மனோஜூடன் 10 வருடமாக இருக்கிறார். இந்த காலத்தில் இப்படி ஒரு குரு பத்தியோடு இருக்கும் ஒரு உதவியாளரை நான் பார்த்ததே இல்லை. மனோஜ் இறந்த போது அந்த நேரத்தில் கவின் உடன் இருந்து இருக்கிறார். அவர், ஆம்புலன்ஸ் வருவதற்குள், மனோஜின் கால்களை பிடித்து, கைகளை பிடித்து அவரை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். அந்த குடும்பத்துக்கு விசுவாசமான நபர் கவின் என்று சுசீந்திரன் அந்த போட்டியில் கூறியுள்ளார்.

Manoj bharathiraja suseenthiran

கழுத்தில் இருந்த நகை: அதே போல, மூத்த பத்திரிக்கையாளர் அளித்த மற்றொரு பேட்டியில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்குவதற்கு, மறைமுகமாக பாரதிராஜாவும் ஒரு பெரிய தொகையை அதில் முதலீடு செய்தார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் ரிலீஸ் நேரத்தில் பண பிரச்சனை வந்துவிட்டது. அதனால், சுசீந்திரனும், மனோஜூம், அவரது அம்மாவை பார்த்து உதவி கேட்டார்கள். உடனே மனோஜ்ஜின் அம்மா, கழுத்தில் அணிந்திருந்த நகை உட்பட, வீட்டில் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் எடுத்து தந்தார். அதே போலத்தான் அவரது மனைவியும் செய்தார். அந்த நகைகளை அடமானம் வைத்துத்தான் படம் வெளியானது. மகன் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக தாய், தகப்பன் இருவருமே பெரிய உதவி செய்தார்கள் என்று பத்திரிக்கையாளர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X