மனோஜை ஆட்டிப்படைத்த சர்க்கரை நோய்..13 வயதிலிருந்தே இன்சுலின்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பைபாஸ் சிகிச்சை செய்து வீட்டில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி குறித்து பாரதி ராஜாவின் சகோதரர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், மனோஜ் பாரதிராஜாவிற்கு 13 வயதிலிருந்தே, சர்க்கரை நோய் இருந்தது. அதற்காக அவர் இன்சுலின் பயன்படுத்தினார். அதன் பிறகு மெடிசனை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், மீண்டும் அவர் எப்போதில் இருந்து இன்சுலின் பயன்படுத்தினார் என்பது எங்களுக்கே தெரியாது. வழக்கமான செக்கப் போகும் போதுதான், மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதோ பிரச்சனை என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார். இதனால், பைபாஸ் சர்ஜரி செய்து விடலாம் என்று வீட்டில் இருப்பவர்கள் சொன்னார்கள். நான் கூட இதயத்தில் ஏதாவது அடைப்பு இருந்தால் பைபாஸ் செய்யலாம் எதற்கு என்று கேட்டேன். ஆனால், இதை செய்து விட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

திடீரென மாரடைப்பு: ஆனால், இதில் மனோஜுக்கு சற்று தயக்கம் இருந்தது. இந்த சர்ஜரி பண்ண வேண்டுமா? என்று யோசனை செய்து கொண்டு இருந்தார். எனக்கு, பைபாஸ் செய்து கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேல் ஆகிறது. இதனால் அவனுக்கு இந்த விஷயத்தை எடுத்து சொன்ன பிறகு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன் பின், 3 நாட்கள் ஐசியூவில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்து நன்றாகத்தான் பேசிக்கொண்டு இருந்தான். திடீரென, ஏதோ ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லிக்கொண்டே.. நெஞ்சை பிடித்துக்கொண்டே உயிரிழந்தார் என்று பாரதிராஜாவின் சகோதர் ஜெயராஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
போராடினார்: அதேபோல, இயக்குநர் சுசீந்திரன், மனோஜ் பாரதி ராஜா குறித்து பேசிய பேட்டியில், இயக்குனர் பாரதிராஜாவின் மகனாக இருந்தாலும் மனோஜ், ஒரு இயக்குனராக வேண்டும் என்பதற்காக பலவிதமான போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவருக்கு நடிகராக வேண்டும் என்ற விருப்பமே இல்லை, இயக்குநரக வேண்டும் என்பது தான் அவரின் ஆசை. சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகம் மட்டும் வெளியில் வந்து இருந்தால், மனோஜ் பாரதிராஜாவின் சினிமா வாழ்க்கையே வேறுவிதமாக மாறி இருக்கும். ஆனால், கடைசி வரை அது நடக்காமல் போனது தான் மனோஜின் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரம்.

மிகப்பெரிய இழப்பு: மனோஜ் அவர்களின் மனைவியை சந்தித்து பேசவே முடியவில்லை. எப்படி அவரை சமாதான படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், மனோஜும் அவரது மனைவியும் ஒரு நண்பர்கள் போலத்தான் பழகுவார்கள். அதை நான் கண்ணார பார்த்திருக்கிறேன். இது மனோஜின் மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. இதிலிருந்து அவர், எப்படி மீண்டு வர போகிறார் என்பதே எனக்கு தெரியவில்லை. தனது இரண்டு மகள்களிடம் அவர் அப்பா போல நடந்து கொள்ள மாட்டார். நண்பன் போல தான் நடந்து கொள்வார். அதுபோல இருந்த குழந்தைகள் எப்படி, அப்பா இல்லாமல் இந்த கசப்பான சம்பவத்தை கடந்து வருவார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ஆம்புலன்ஸ் வருவதுவதற்குள்: சர்ஜரிக்கு பிறகு அவர் நன்றாகத்தான் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல அதன்பிறகு அவருடைய மனைவி டீ போட்டு தரட்டுமா என்று கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வருவதற்கு உள்ளாகவே மனோஜ் பாரதிராஜாவின் உயிர் பிரிந்து விட்டது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள், பரிசோதனை செய்துவிட்டு பல்ஸ் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதையேற்றுக்கொள்ளாமல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சண்டையே நடந்திருக்கிறது. அதன் பிறகு தான் அருகில் இருந்து ஒரு மருத்தவர் வரவைக்கப்பட்டு அவர் வந்து பரிசோதனை செய்தபின் தான், மனோஜ் பாரதிராஜா உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். மருத்துவர் வீட்டிற்குள் வருவதற்குள், அவரின் உதவியாளர் கவின் கால், கைகளை எல்லாம் தேய்த்து தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார். மனோஜின் கடைசி நேரத்தில் அவருடன் இருந்தது அவரின் உதவியாளர் கவின் தான். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மனோஜின் உதவியாளராக இவர் தான் இருக்கிறார். மார்கழி திங்கள் திரைப்படத்திலும் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். உண்மையில் கவின் போன்ற ஒரு விசுவாசி கிடைப்பது மிகவும் கஷ்டம். அவர்தான் கடைசி நேரத்தில் அந்த குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்தார்.
மிகப்பெரிய கொடுமை: இது பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு, இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார் என்பதே எனக்கு தெரியவில்லை. இந்த உலகத்திலேயே மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், நாம் இருக்கும்போது மகனின் மரணத்தை பார்ப்பது தான். அதற்கு நிகராக இந்த உலகத்தில் கொடுமையான விஷயம் எதுவுமே இல்லை. நிச்சயமாக இது பாரதிராஜாவின் கடைசி நிமிடம் வரைக்கும் மனதில் ஒரு வழியாகத்தான் இருக்கும், எத்தனை முறை ஆறுதல் சொன்னாலும் அந்த வலிக்கு நம்மால் மருந்திடவே முடியாது என்று இயக்குநர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

மனோஜின் மனைவி: 1976ம் ஆண்டு பிறந்த மனோஜ், தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், அல்லு அர்ஜுன், வருசமெல்லாம் வசந்தம். ஈரநிலம், மகாநடிகன் போன்ற படத்தில் நடித்தார். மனோஜ் பாரதி ராஜாவிற்கு தந்தையைப் போல இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மணிரத்னத்தின் பாம்பே படத்திலும், ஷங்கரின் எந்திரன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின் படவாய்ப்பு இல்லாமல் இருந்த மனோஜ் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதைத்தொடர்ந்து விருமன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மனோஜின் மனைவி நந்தனாவும் ஒரு நடிகையாவார். இவர் கலிங்கன், ஏபிசிடி, சிநேகிதன் போன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மனோஜும் நந்தனாவும் சேர்ந்து சாதூர்யன் படத்தில் நடித்த போது காதலித்ததைத் தொடர்ந்து இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











