ஒரு மாஸ் கமர்ஷியல் படம்.. தளபதியை வச்சு பண்ணனும்.. இயக்குனர் சுசீந்திரன் விருப்பம்!

சென்னை : நடிகர் விஜயை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

தமிழ சினிமாவில் தன் படங்களால் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் சுசீந்திரன். தன் முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்திலேயே தனது முத்திரையை பதித்தார். இதையடுத்து வெற்றி இயக்குனர் எனற் பெயரை எடுத்தார்.

 Director Susheendran Interview

நடிகர் கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல படத்தை இயக்கினார் சுசீந்திரன் இப்படமும் வெற்றிப்பெற்றது. இதன் பின் அழகர்சாமியின் குதிரை, ஜீவா, பாண்டியநாடு படங்களை இயக்கினார். இப்படங்கள் கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. பின்னர், பல படங்களை இயக்கிய சுசீந்திரன் இறுதியாக கேன்னடி கிளப் மற்றும் சாம்பியன் படங்களை இயக்கினார்.

தற்போது இவரின் சொந்த ஊரான ஒட்டஞ்சத்திரத்தில் இருக்கிறார். அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயை வைத்து நல்ல கிராமத்து குடும்ப படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பேசிய அவர். நான் இப்பொழுது என் மாமியார் வீட்டில் இருக்கிறேன் தினமும் கறி விருந்து தான், நிம்மதியாக இருக்கிறேன் என் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறேன் என்று கூறினார்.

 Director Susheendran Interview

ஷூட்டிங் என்றால் டைமுக்கு எழுந்திரக்கணும், யோகா செய்யணும், ஆனால், இப்போ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எழலாம், எப்போ வேண்டுணுமானாலும் யோகா செய்யலாம் என்று கூறினார். பின் அவருக்கு தனுஷை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் மிக சிறந்த நடிகன் என்றும் கூறினார்.

பின் தனக்கு புது கதைகள் எழுத நல்ல இடைவெளி கிடைத்திருப்பதாகவும், தன் அடுத்த படத்தில் விக்ரம் பிரபு, தம்பி ராமையா, நடிப்பதாகவும் கூறினார். இது ஒரு இன்வஸ்டிகேஷன் சம்மதப்பட்ட கதையாக இருக்கும் மேலும் டி.இமான் இதற்கு இசையமைக்க போவதாகவும் கூறினார்.

 Director Susheendran Interview

பாண்டிய நாடு, நான் மகான் அல்ல போன்ற மாஸ் கமர்ஷியல் படம் ஒன்று விஜயை வைத்து எடுக்க போவதாக கூறினார். அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் கூறினார். பின் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X