twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பையில் தவித்த 90 தமிழர்கள்.. ஐஏஎஸ் அதிகாரியுடன் இணைந்து சொந்த ஊர் திரும்ப உதவிய பிரபல இயக்குனர்

    By
    |

    சென்னை: மும்பையில் தவித்துக்கொண்டிருந்த சுமார் 90 தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப, ஐஏஎஸ் அதிகாரியுடன் இணைந்து உதவி செய்திருக்கிறார், பிரபல இயக்குனர் சுசி கணேசன்.

    கொரோனா லாக்டவுன் மொத்தமாகச் சிதைத்திருக்கிறது பலரது கனவுகளையும் வாழ்க்கையையும். அவர்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.

    வெளிமாநிலங்களுக்குப் பிழைப்புக்குச் சென்ற பலர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை, அந்தந்த மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    அடப்பாவமே.. இதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகினாரா, அந்த பிரபல 'கண்ணடி' நடிகை? அடப்பாவமே.. இதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகினாரா, அந்த பிரபல 'கண்ணடி' நடிகை?

    இயக்குனர் சுசி கணேசன்

    இயக்குனர் சுசி கணேசன்

    இந்நிலையில், மும்பையில் தவித்து வந்த சுமார் 90 தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உதவி இருக்கிறார், இயக்குனர் சுசி கணேசன். தமிழில், பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கியவர் இவர். 'திருட்டுப் பயலே 2' படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதுபற்றிய தகவல் தெரிந்ததும் மும்பையில் வசித்து வரும் சுசி கணேசனிடம் விசாரித்தோம்.

    ஐஏஎஸ் அதிகாரி

    ஐஏஎஸ் அதிகாரி

    ''மும்பையில் வசிக்கும் மீடியா நண்பர் கோவிந்தன் என்னிடம் பேசினார். மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 90 பேர், சொந்த ஊர் திரும்ப தமிழக அரசின் இ பாஸ் வாங்க சிரமப்படுவதாகக் கவலையோடு சொன்னார். விவரங்களை அனுப்புங்கள், உதவ ஒருவர், இருக்கிறார் என்றேன். அந்த ஒருவர், ஐஏஎஸ் அதிகாரி! மகாராஷ்டிர அரசில் முக்கிய துறையில் பணியாற்றும் அவருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.

    டிரைவர்கள்

    டிரைவர்கள்

    உடனடியாக டோக்கன் நம்பர்களை அனுப்புங்கள் என்றார். அவர் வேகம் பிரமிக்க வைத்தது. அடுத்த சில மணி நேரங்களில், அந்த நண்பரிடம் இருந்து மீண்டும் அழைப்பு. 3 பஸ் வந்துவிட்டது. எல்லோரும் கலக்கத்தோடு இருக்கிறார்கள் என்றார். பஸ் சீக்கிரம் கிளம்பாவிட்டால், டிரைவர்கள் போய்விடுவார்கள் என்றார். உடனே ஐ.ஏ.எஸ்-க்கு மெசேஜ் அனுப்பினேன். பதிலில்லை. கவலைத் தொற்றிக்கொண்டது.

    பயம் காரணமாக

    பயம் காரணமாக

    அடுத்த சில நிமிடங்களில், 'சார் பாஸ் கிடைத்துவிட்டது. எல்லோரும் கிளம்புகிறார்கள். நன்றி' என்றார், மீடியா நண்பர். எனக்கு வந்த நன்றிகளை ஐஏஎஸ்-க்கு பார்வேர்ட் செய்துவிட்டு, தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தபோதுதான் தெரிந்தது, அவர்கள் போகவில்லை என்பது. அந்த நண்பர் கவலையாகப் பேசினார். எல்லோரும் கிளம்ப ரெடியாகிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ பயம் காரணமாக, டிரைவர்கள் 3 பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

    பதைபதைப்பு

    பதைபதைப்பு

    என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். மீண்டும் 3 புதிய பஸ்களை ஏற்பாடு செய்கிறோம். இன்றே பாஸ் வாங்கி அனுப்பாவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும். பழைய பாஸ் வேஸ்டாகிவிட்டது' என்றார். பாஸ் என்பதை தாண்டி, பஸ்ஸில் இருந்து இறக்கிவிடப்பட்டவர்களின் பதைபதைப்பும் கவலையும் ஏக்கமும் என் கண்ணில் ஆடியது. மீண்டும் அந்த ஐஏஎஸ்-க்கு ஃபோன். நிலைமையை விவரித்தேன்.

    ரயிலில் கிளம்பும்

    ரயிலில் கிளம்பும்

    அசரவில்லை அவர். மீண்டும் 3 பஸ்களின் விவரங்களை அனுப்பினேன். இரண்டு மணி நேரத்தில் கிடைத்துவிட்டது, பாஸ். மதுரைக்கும், விருதுநகருக்கும் மக்கள் கிளம்புகிறார்கள் என்றதும், இரண்டாவது முறை நன்றி சொல்ல, அவருக்கு அழைத்தேன். பிஸி. பிறகுதான் தெரிந்தது, புனேவில் இருந்து ரயிலில் கிளம்பும் 1200 தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை அவர் செய்து கொண்டிருந்தார் என்பது.

    அன்பழகன் ஐ.ஏ.எஸ்

    அன்பழகன் ஐ.ஏ.எஸ்

    பிறகு அவரிடம் பேசியபோது, நீங்கள் கேட்டதும், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரி பூஜா கிர்லோஸுக்கு உங்கள் மெசேஜை பார்வேட் செய்தேன். அவர் உடனடியாக உதவினார். அவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றார் அந்த ஐஏஎஸ்.இந்திய ஆட்சிப் பணி என்பது கவர்ச்சியான பதவி அல்ல, களம் இறங்கி செய்யும் பதவி என்பதை ஆழமாய் உணர்த்திய சம்பவம் இது. இந்த டென்ஷன் நேரத்திலும் அசராமல் உதவிய அந்த தமிழர், அன்பழகன் ஐ.ஏ.எஸ்!' என்றார் சுசி கணேசன்.

    English summary
    Director Susi ganesan helps 90 tamils stranded in Mumbai to return their home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X