Murali: முரளி அந்த விஷயத்தில் வீக்.. அட்வைஸ் பண்ணியும் கேட்கல.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகர் முரளி. அந்த படத்தின் வெற்றிக்கு பின், இங்கேயும் கங்கை, புதியவன், பகல் நிலவு, கீதாஞ்சலி என அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக முரளி நடித்த இதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை முரளிக்கு தேடி தந்தது. இதனால் இன்றும் ரசிகர்கள் நடிகர் முரளியை இதயம் முரளி என அழைக்கிறார்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் முரளி தன்னுடைய 46வது வயதில் உயிரிழந்தார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றுவது மகன் ஆகாஷ். இதில் அதர்வா பானா காத்தாடி மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் வசூலை அள்ளியது. அதே போல, முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் கடந்த ஆண்டு வெளிவந்த நேசிப்பாயா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Murali V sekar Atharva
Photo Credit:

முரளிக்கு இருந்த கெட்டப்பழக்கம்: இந்நிலையில் திரைப்பட இயக்குநரான வி சேகர் Media Circle யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மறைந்த நடிகர் முரளி குறித்து பேசி உள்ளார். அதில், முரளியின் அப்பா ஒரு இயக்குனர், முரளியும் நன்றாக நடிக்க கூடிய நடிகர் தான். நடிகர் விஜயகாந்த் போல பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய நடிகர் முரளி. படத்தில் பிஸியாக நடத்துக்கொண்டு இருந்த அவருக்கு, இடையில் கால் சீட் கொடுப்பதில் பிரச்சனை இருந்தது. என்னுடைய படத்திலேயே அவர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. எந்த பழக்கமாக இருந்தாலும் வெளியில் அதை வைத்துக் கொள்ள வேண்டும், அதை தொழில் செய்யும் இடத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது. அவருக்கு இருந்த பழக்கத்தால், அவரை நம்பி படத்தை எடுப்பவர்கள் பாதித்தார்கள். அது போல தான், நானும் நேரடியாக அவரால் பாதிக்கப்பட்டேன்.

அட்வைஸ் பண்ணியும் கேட்கல: பெண்கள் பழக்கம், குடிப்பழக்கம் அவருக்கு அதிகமாக இருந்தது. எந்த பழக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால், தொழிலில் செய்யும் இடத்தில் இருக்கக் கூடாது. இதனால், அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. கார் ஓட்டுபவன் தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா என்னாகும், காரில் இருப்பவர்கள் காலி. எது செய்தாலும், அதற்கு என்று இடம் பொருள் வேண்டும். சூப்பர்குட் பிலிம்ஸ் சௌத்ரியே முரளிக்கு பல முறை அட்வைஸ் பண்ணயும் கேட்கல, பின் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என முடிவு எடுத்து சௌத்ரி எல்லாரும் கழட்டி விட ஆரம்பிச்சதும் மார்க்கெட் கம்மியா ஆகிடுச்சு என்று இயக்குனர் வி.சேகர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குநர் வி சேகர்: குடும்ப கதைகளை கொடுத்து பெயர் எடுத்த இயக்குநர் வி சேகர், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் என பல வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். இவர் நடிகர் முரளியை வைத்து நம்ம வீட்டு கல்யாணம் என்ற படத்தை எடுத்தார், இதில், மீனா, லிவிங்க்ஸ்டன், வடிவேலு, விவேக்,மனோரமா, சிந்து, சோனியா, விந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். இவர் கடைசியாக ஆளுக்கொரு ஆசை என்ற படத்தை இயக்கினார் அதன் பிறகு இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X