1999ம் ஆண்டே விஜய்க்கு கதை சொன்னே..ஆனால்,அப்போ வாய்ப்பு கிடைக்கல..வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

சென்னை : நடிகர் விஜய்க்கு 1999ம் ஆண்டே கதை சொன்னேன், அந்த நேரத்தில் ஒரு சில காரணங்களால் வாய்ப்பு பறிபோனது என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெற்றிமான்

வெற்றிமான்

இந்த இருபடங்களின் ஷூட்டிங்கும் முடிந்த பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிஉள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

விடுதலை

விடுதலை

இதில் விஜய் சேதுபதி ஆசிரியர் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்று வருகிறது. பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த படத்தில் சூரி போலீஸ் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கும் வெற்றிமாறன், இதன் ஷூட்டிங்கை முடித்த பிறகே புதிய படத்தைப் பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்து விஜய் படமா?

அடுத்து விஜய் படமா?

அப்படம் விஜய் நடிக்கும் படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வாடிவாசல் படத்தை முடித்த பிறகு விடுதலை படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கே அடுத்த படத்தை இயக்குவார் என்றும், இப்படத்துக்குப் பிறகுதான் அவர் விஜய்யுடன் இயக்குவார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன.

எஸ்ஏசியிடம் கதை சொன்னேன்

எஸ்ஏசியிடம் கதை சொன்னேன்

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வெற்றிமாறன், அடிதடி பட இயக்குநர் சிவராஜ் என் நண்பர் அவர் அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தார். அவரிடம் ஒரு கதையை சொன்னேன். உடனே அவர் இந்த படத்தை நான் இயக்குகிறேன் என்றார். இந்த கதைக்கு விஜய் சரியாக இருப்பாரு என்று எஸ்ஏசியிடம் கதை சொல்ல தேதி கிடைத்தது.

கதை சொல்ல தெரியல

கதை சொல்ல தெரியல

அந்த காலகட்டத்தில், பூவே உனக்காக, லவ் டூ என விஜய் டாப் நடிகராக வளர்ந்து கொண்டிருந்த கால கட்டம் அது. ஆனால், நான் அப்போத்தான் பீல்டுக்கே வந்து இருக்கேன் இதனால், எஸ்.ஏ.சந்திரசேகரை பார்த்ததும் என்னால சரியாக கதை சொல்ல முடியாமல் போனது. விஜய் நடித்து ஹிட்டான நண்பன் கதை போன்றதுதான் அந்த கதை, ஆனால், கதை சொல்ல தெரியாததால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X