நயன்தாரா சூர்யாவை வைத்து காவியப்படம் எடுக்கணும்.. ஏ.ஆர் ரகுமான் சொன்னாரு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானை பேட்டி எடுத்தபோது அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரசியமான விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
Recommended Video
தமிழில் வெற்றி இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் ஏ ஆர் ரகுமான் எப்போது ஒரு படத்தில் இணைவார்கள் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்தப் பேட்டி அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
இந்த பேட்டியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தமிழில் பிரபல காவியம் ஒன்றை நடிகர் சூர்யா மற்றும் நயன்தாராவை வைத்து எடுக்க வேண்டுமென சிலாகித்து ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஏ ஆர் ரகுமான் இந்தியா முழுவதும் பல மொழிகளின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் ஹிந்தியில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்ததற்காக ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

படங்களை ரசிப்பதற்காகவே
பிரபலமான இயக்குனரும் நடிகை நயன்தாராவின் காதலருமான இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் இன்று வரை பல்வேறு ரசிகர்களை கவர்ந்து விக்னேஷ் சிவனின் படங்களை ரசிப்பதற்காகவே ஒரு தனி கூட்டம் உருவாகியிருக்கிறது.

காத்து வாக்குல இரண்டு காதல்
விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் "காத்து வாக்குல இரண்டு காதல்" என்ற திரைப்படத்தில் இணைகின்றனர்.

பேட்டியின் மூலம் இணைந்துள்ளனர்
வளர்ந்து வரும் இயக்குனராக உள்ள விக்னேஷ் சிவனும் உலகளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக புகழப்படும் ஏ ஆர் ரகுமான் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாத நிலையில், முதல் முறையாக ஒரு பேட்டியின் மூலம் இணைந்துள்ளார்.

சூர்யா நயன்தாராவை வைத்து
பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் விக்னேஷ் சிவன் ஏ ஆர் ரகுமானை பேட்டி எடுத்தபோது பல சுவாரசியமான விஷயங்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துகொண்டார். அதில் மிக முக்கியமாக தமிழில் பல பிரபலமான காவியங்களை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று கூறிய ஏஆர் ரகுமான், அதில் "சிலப்பதிகாரம்" காவியத்தை சூர்யா மற்றும் நயன்தாராவை வைத்து பண்ண வேண்டும் என விக்னேஷ் சிவனிடம் கூறியிருக்கிறார்.

கண்டிப்பாக ரொமான்டிக்
ஒருவேளை ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்தால் அந்தப் படம் கண்டிப்பாக ரொமான்டிக் அல்லது நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட படமாகத்தான் இருக்கும் எனவும், ஏ ஆர் ரகுமான் எது செய்தாலும் புதுமையாக செய்யவேண்டும் என நினைப்பவர் எனவும் விக்னேஷ் சிவன் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

விரைவில் கூட்டணி
தமிழ் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணி விரைவில் நிறைவேற இருக்கிறது என்பது இந்த பேட்டியின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் அனைவரும் மற்றுமொரு பிளாக்பஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











