சந்தானம் கலாய்ச்சாலே தாங்க முடியாது, கூட யோகிபாபுவும் சேர்ந்தா கேட்கவா வேணும்? இது டகால்டி ரகசியம்

By

சென்னை: 'காமெடி படங்களுக்கு தமிழ் சினிமாவுல எப்பவும் வரவேற்பு உண்டு. எப்ப என்ன டிரெண்ட் இருந்தாலும் காமெடி படங்கள் கண்டிப்பா கலெக்‌ஷன் அள்ளுற ஏரியாவுல இருக்கும். இதுக்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்' என்கிறார் 'டகால்டி' இயக்குனர் விஜய் ஆனந்த். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் சிவாஜி, எந்திரன் படங்களில் சினிமா கற்றவர்.

அதென்ன டகால்டி?

Director Vijay Anand talks about Santhanam starer Dagaalty

அதுதான் டகால்டி! இது என்னங்க, டகால்டியா இருக்குன்னு சொல்வோம்ல. அதுதான் டைட்டில். யாரு, யாரை டகால்டி பண்றாங்க அப்படிங்கறதுதான் படத்தோட கதை. சின்ன லைன்தான். அதை இப்பவே சொன்னா, சஸ்பென்ஸ் போயிரும். அதனால அது வேண்டாம்.

சந்தானம் என்ன கேரக்டர்ல வர்றார்...

அதை சொன்னாலும் கதையை சொன்ன மாதிரி ஆகிடும். இது ஆக்‌ஷன் காமெடி சப்ஜெக்ட். தென்மாவட்டத்துல ஆரம்பிச்சு பயணிக்கிற, டிராவல் கதைன்னும் சொல்லலாம். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.

Director Vijay Anand talks about Santhanam starer Dagaalty

சந்தானம் நிறைய காமெடி படங்கள் பண்ணியிருக்கார்... இதுல?

அந்த படங்கள்ல இருந்து இது கண்டிப்பா வித்தியாசமா இருக்கும். வழக்கமான சந்தானம் படம் மாதிரி இருக்காது. ஆனா, சந்தானம் படம் மாதிரி இருக்கும். காமெடியில மிரட்டியிருக்கார். டிரைலர் பார்த்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். 'என்னோட பெரிய எய்மே, அஜித், விஜய்யை வச்சு படம் பண்றதுதான்'னு ஹீரோயின் சொல்ல, 'அப்ப சிறுத்தை சிவா, அட்லிலாம் என்ன பண்ணுவாங்க?'ன்னு கவுன்டர் கொடுப்பார் சந்தானம். இதே போல படம் பூராவும் இருக்கு அவரோட ஜாலி கேலி.

Director Vijay Anand talks about Santhanam starer Dagaalty

யோகிபாபுவும் சந்தானத்தோட சேர்ந்திருக்காரே...

ஆமா. ஒருத்தர் கலாய்ச்சாலே தாங்க முடியாது. ரெண்டு பேருன்னா கேட்கவே வேண்டாம். ஸ்கிரிப்ட்ல இருக்கிற சில காமெடியை, ஸ்பாட்ல ரெண்டு பேரும் பேசி இன்னும் டெவலப் பண்ணி, அசத்திருக்காங்க. இவங்க ரெண்டு பேர் காம்பினேஷனுமே புதுசா இருக்கும்.

ஆக்‌ஷன்லயும் காமெடியாமே?

Director Vijay Anand talks about Santhanam starer Dagaalty

இது, காமெடி ஆக்‌ஷன். அதாவது ஹீரோ அடிச்சா, பத்து இருபது பேர் பறந்து விழுறது மாதிரி பண்ணல. ஜாக்கிசான் படங்கள்ல வர்ற ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும்ல, காமெடியா. அது மாதிரி இருக்கும். அங்க அடிதடி நடக்கும். நமக்கு சிரிப்பா இருக்கும். அதுபோல பண்ணியிருக்கோம். சந்தானம் அடிச்சா ரசிகர்கள் ஏத்துக்கிற மாதிரி காட்சிகள் இருக்கும்.

தருண் அரோரா, ராதாரவி வில்லன்களா?

தருண் மெயில் வில்லனா பண்ணியிருக்காரு. ராதாரவி சார் புது லுக்ல வருவார். ஹீரோயின் ரித்திகா சென், பெங்காலி பொண்ணு. ஒரு லட்சியத்தோட இருக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அவங்க லட்சியம் என்ன ஆகுதுன்னு கதை போகும். இவங்க மட்டுமில்லாம, மனோபாலா, சந்தானபாரதி, ரேகான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. கண்டிப்பா காமெடிக்கு கியாரண்டியான படம். படத்தை எஸ்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X