twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பில்டர் கோல்டு" செம்ம போல்டு ... அன்டோல்ட் விஷயங்களை பேசும் விஜயபாஸ்கர்

    |

    சென்னை : நடிகரும் இயக்குனருமான விஜயபாஸ்கர் இயக்கி, தற்போது வெளி வந்துள்ள திரைப்படம் " பில்டர் கோல்ட்". இந்த திரைப்படத்தில் இவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகி கதாநாயகன் யாருமில்லை. எல்லாருமே மிக முக்கியமான ரோல் தான் .

    Recommended Video

    படத்தில் ரத்தம் காட்டுவது தப்பில்லை | Filter Gold Director Vijayabaskar Interview | Filmibeat Tamil

    இதுவரை முழுக்க முழுக்க திருநங்கைகள் பற்றிய படம் வெளிவந்ததில்லை. இதுவே முதல் முறை என்பதால் அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புறக்கணிக்கப்படும் திருநங்கைகளின் உணர்வுகள், வலிகள் போன்றவை தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது.

    அவர்கள் வழியில் அவர்களை வாழவிட்டால் போதும் என்ற கருத்தை சொல்லும் இந்த படம் பற்றி, இயக்குனர் விஜயபாஸ்கரே நிறைய கருத்துக்களை நம்மிடையே பகிர்கிறார்

    தயாராகிறது முண்டாசுப்பட்டி 2...தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் தயாராகிறது முண்டாசுப்பட்டி 2...தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

    சிகரெட் படமா என்றால்..

    சிகரெட் படமா என்றால்..

    கேள்வி : பில்டர் கோல்டுன்னு இந்த டைட்டில் எப்படி வச்சீங்க?

    பதில் : முதல்ல இந்த படத்துக்கு வேற ஒரு டைட்டில் வச்சிருந்தோம். யாருக்காக இந்த படம் எடுக்குறோமோ அவங்களுக்கே இந்த டைட்டில் பிடிக்கலங்கிறப்போ அந்த டைட்டில் மாத்தியாச்சு. இப்ப எல்லாருக்கும் இந்த டைட்டில் பாக்குறப்ப சிகரெட் நியாபகம் வரலாம். ஆனா படம் பார்த்து முடிச்சதும் வேற ஒரு விஷயத்தோட கனெக்ட் ஆவீங்க.

    எத்தன கட்ஸ் தெரியுமா?

    எத்தன கட்ஸ் தெரியுமா?

    கேள்வி : நிறைய சீன் டெலிட் ஆகிடுச்சா?

    பதில் : எவ்ளோ கட்ஸ் ஆச்சுன்னு சரியா சொல்ல முடியல . எல்லா இயக்குனருக்கும் இருக்க மாதிரி எனக்கும் இந்த படைப்புல நான் திருப்தி ஆகல. ஒரு வேளை வேறு மொழிகள் லயும் இந்த படம் எடுக்க வாய்ப்பு கிடைச்சா, இதவிட இன்னும் நல்லா பண்ணுவேன். நிறைய சீன் படத்துல கட் ஆகிட்டு. ரொம்ப நாள் ஆனதால எத்தன சீன் டெலிட் ஆச்சுன்னு சொல்ல முடியல. இப்பவே ரத்தம் நிறைந்த காட்சிகள் நிறைய இருக்கும் படத்துல. எடிட்டிங்-க்கு முன்னாடி இன்னும் நிறைய ரத்த காட்சிகள் படத்துல இருந்துச்சு. அதுதான் உயிரோட்டம் குடுக்குங்கிறதால ரத்தம் சம்பத்தப்பட்ட காட்சிகள் படத்துல இருக்கும்.

    இதற்கான தேடல் என்பது

    இதற்கான தேடல் என்பது

    கேள்வி : திருநங்கைகள் பற்றிய உலகளாவிய ஆராய்சி, தகவல் சேகரிப்புல்லாம் நிறைய நடந்துருக்குமோ?

    பதில் : இந்த படத்திற்கு அந்த அளவுக்கு ஆராய்ச்சி, டாகுமெண்ட் ல்லாம் பண்ணல. ஒரு கற்பனைக்கதைதான். ஒவ்வொரு காட்சியும் நிகழ்கால வாழ்க்கையோட கனெக்ட் ஆகுற மாதிரி தான் இருக்கும்

    டோரா ட்ரஸ்

    டோரா ட்ரஸ்

    கேள்வி : டோரா விஜி, அவங்க காஸ்ட்யூம் பற்றி சொல்லுங்களேன்.

    பதில் : அந்த கேரக்டருக்கு என்ன காஸ்ட்யூம் பொருந்துமோ, அத மட்டும் எதார்த்தமா அமைச்சிருக்கோம். இதுக்காக ஸ்பெஷல் காஸ்ட்யூம் கவனமெல்லாம் எடுக்கல. வீட்ல இருக்கப்ப, வெளில இருக்கப்ப எப்படி இருப்பாங்களோ, அதே போல இயல்பான காஸ்ட்யூம்தான் செலக்ட் பண்ணிருக்கோம்.

    கேள்வி : திருநங்கைகளோட ஆதரவு எப்படி இருந்துச்சு?

    பதில் : ஷீத்தல் நாயக்-ன்னு ஒருத்தவங்க. பாண்டிச்சேரில இருக்காங்க. திருநங்கைகளுக்கு தலைவி அவங்கதான். அவங்கதான் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. அவங்க இல்லன்னா இந்த படமே இல்ல. அவங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கிறேன். அதே போல எங்க அப்பாவும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாரு. அவருக்கும் எனது நன்றிகள்.

    ரெண்டு பேருக்குமே ஓக்கே

    ரெண்டு பேருக்குமே ஓக்கே

    கேள்வி : பாடல் ம்யூசிக், லொகேஷன் ல்லாம் எப்படி

    பதில் : உமர்-ங்கிற ம்யூசிக்டைரக்டர் தான் இதுக்கு ம்யூசிக் பண்ணிருக்காரு. அவரு ரொம்ப சப்போர்டிவ் வா இருந்தாரு. திரும்ப திரும்ப நிறைய திருத்தங்கள், மாற்றங்கள் சொல்லியும், சளைக்காம எனக்கு பிடிச்ச மாதிரி, என்ன விரும்புறனோ அது மாதிரி செஞ்சி குடுத்தார். கடைசியா ரெண்டு பேருக்குமே பிடிச்சமாதிரி அமைஞ்சது படத்தோட ம்யூசிக். பலரும் ரசிக்க வைக்கும் வகையில இருந்த மாண்டேஜ் லொகேஷன் ல்லாம் கேரளாவுல எடுத்தது. ரொம்ப நல்லாவே வந்துருக்கு.என்று மிகவும் மென்மையாக தன்மையாகவும் பதிலளித்தார் இயக்குனரும் நடிகருமான விஜய பாஸ்கர். இவர் யாரிடமும் அசிஸ்டண்ட் ஆக வேலை செய்யாமல், நேரடியாக இயக்கிய முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல வெரைட்டியான படங்கள் எடுக்க வாழ்த்துக்களை தெரிவித்தபோது, அதற்கும் மென்மையான மகிழ்வும் புன்னகையுமே பதிலாக அளித்தார். மேலும் பில்டர் கோல்ட் திரைப்படத்தின் சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களையும், பிலிம்பீட் தமிழ் யூட்யூப் தளத்திலும் காணலாம்.

    English summary
    Director Vijayabaskar Reveals the Untold secrets in Filter Gold Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X