twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தைக்கு பேர் வைக்கிற மாதிரி தான் டைட்டிலும்.. இயக்குநர்கள் பாலாஜி தரண், பிரேம் குமார் பேட்டி!

    |

    சென்னை: ஒரு பக்க கதை படத்தின் இயக்குநரும் 96 படத்தின் இயக்குநரும் அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய் பாலாஜி தரணிதரனின் அடுத்த படம் தான் ஒரு பக்க கதை.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார், அதனை தொடர்ந்து இயக்கிய 96 படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஒரு பக்க கதை சற்றே காலதாமதம் ஆகி ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    Directors Balaji Dharaneetharan and Prem Kumar interview!

    வித்தியாசமான கதை என்பதால், பலரது பாராட்டுக்களை படம் அள்ளி உள்ளது.

    படத்தை பற்றி அதிகம் ரிவீல் பண்ண முடியாத நிலையிலும், படம் உருவான விதம், படத்திற்காக போட்ட உழைப்பு உள்ளிட்ட மேக்கிங் விசயங்களை இருவரும் இணைந்து ரொம்பவே சுவாரஸ்யமாக கூறியுள்ளனர்.

    96 படத்தை இயக்கிய பிரேம் குமார் பேசும் போது, இன்னமும் தன்னை யாரும், அடையாளம் கண்டு கொள்வதில்லை. நடிகர்களை தானே கண்டு கொள்வார்கள்.

    நாம பாட்டுக்கும் ஜாலியா எங்கே வேண்டுமென்றாலும் சென்று வரலாம் என ரொம்பவே கேஷ்வலாக பேசுவது சூப்பர்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு பக்க கதை என எப்படி வித்தியாசமாக தலைப்பு வைக்கிறீர்கள் அதிலும் தமிழில் அழகாக வைக்கிறீர்களே எப்படி என்கிற கேள்விக்கு பதில் அளித்த பாலாஜி தரணிதரன், தனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் என பளிச்சென பதில் சொல்லி விட்டார்.

    மேலும், குழந்தைக்கு எப்படி பேரை பார்த்து பார்த்து வைப்போமோ, அதே போலத்தான் படத்துக்கும் பெயர் வைப்பேன் என பேசியுள்ள பேட்டி சில பாகங்களாக வெளியாகி வைரலாகி வருகிறது.

    Read more about: interview பேட்டி
    English summary
    Oru Pakka Kathai Director Balaji Dharaneetharan and 96 Director Prem Kumar interview goes viral in Tamil Filmibeat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X