கல்யாணம் பண்ணாம குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.. சத்யராஜ் மகள் பளிச்
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்க்கு என்று தனி அறிமுகம் யாருக்கும் தேவைப்படாது. காரணம், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரங்களை செய்தவர் திவ்யா சத்யராஜ். மேலும் திராவிட கருத்துக்கள் குறித்து பேசுவது, திராவிட இயக்கத்தில் தொடர்ந்து செயலாற்றுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டது என திவ்யா சத்யராஜ் ஒரு முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வளர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.
என்னை பொறுத்தவரையில் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. மோதிரம் மாற்றிக் கொள்வது, தாலி கட்டிக் கொள்வது உள்ளிட்ட எந்த சடங்கு சம்பிரதாயங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே மதம், ஒரே ஜாதி என்று இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அவருடன் இணைந்து வாழலாம். அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அவசியம் கிடையாது.

குழந்தை: மேலும் திருமணம் செய்து கொண்டு தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் அப்படி யாராவது குழந்தை பெற்றுக் கொண்டால் அதை நான் எதிர்க்க மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக் கொண்டே இணைந்து வாழ முடியும்.
ஜாதகம் இல்லை: எனக்கு ஜாதகம் இல்லை என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன். அதேபோல் எனது அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் எனக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுதவே இல்லை. அதேபோல் எனக்கும் அதன் மீது நம்பிக்கை கிடையாது, எனக்கும் அது தேவைப்படவில்லை நான் அதை மிகவும் பெருமையாக சொல்வேன்.

காதல் முறிவு: எனது கடந்த காலங்களில் நானும் காதலித்திருக்கிறேன், காதல் முறிவும் ஏற்பட்டுள்ளது. அதற்காக நான் எனது அப்பாவிடம் சென்று ராஜா ராணி படத்தில் நயன்தாரா மேடம் அழுவது போல் அழ மாட்டேன். நான் தனியாக சென்று அழுது இருக்கிறேன். அதிலிருந்து நான் வெளிவந்தும் இருக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதெல்லாம் என் அப்பாவிற்கு எந்த கவலையும் கிடையாது. அவரைப் பொறுத்த வரையில் நான் நிம்மதியாக இருக்க வேண்டும். நான் திருமணம் செய்து கொண்டால் நிம்மதியாக இருக்கிறேன், என்று நான் உணர்ந்தால், அது அவருக்கு மகிழ்ச்சி. இல்லை என்றால் நான் தனியாக இருந்தால் தான் எனக்கு நிம்மதி என்றால் அதையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று திவ்யா சத்யராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் அதற்கு தங்களது ரியாக்சன்களை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications