Exclusive: பெரியார் படத்தை திமுக பயன்படுத்தக் கூடாது... இயக்குனர் வேலு பிரபாகரன் பரபரப்பு பேட்டி

கடவுள் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வேலு பிரபாகரன்

சென்னை: பெரியார் படத்தை திமுக பயன்படுத்தக் கூடாது என இயக்குனர் வேலு பிரபாகரன் கூறியுள்ளார்.

ஒரு காதல் கதை, கடவுள் ஆகிய படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இருபது ஆண்டுகள் கழித்து கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். நம்மிடம் அவர் பேசியதாவது,

இருபது வருடங்கள்

இருபது வருடங்கள்

"கடவுள் படம் வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது. பகுத்தறிவு சிந்தனை பற்றி அந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருபது வருடங்கள் கழித்து அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன்.

சமூக அரசியல்

சமூக அரசியல்

இன்றைய சூழ்நிலையில் இந்த படம் கட்டாயம் என நினைக்கிறேன். இது ஒரு பகுத்தறிவு தொடர்பான படமாக இருக்கும். சமூக அரசியலை பேசக்கூடியதாக இருக்கும். தமிழ்நாடு பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பெரியாருக்கு பிறகு யாருமே பகுத்தறிவை பரப்பவில்லை.

பெரியார் கொள்கை

பெரியார் கொள்கை

குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் பெரியார் கொள்கைகளை பேசுகின்றன. ஆனால் அவர்களின் கட்சியிலேயே ஆண்மீக சிந்தனை, கடவுள் பக்தி கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறகு எப்படி அது பெரியார் கட்சியாக இருக்க முடியும். இவர்கள் பெரியார் படத்தை பயன்படுத்துவதால், பகுத்தறிவு சிந்தனை தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே அவர்கள் பெரியார் படத்தை பயன்படுத்தக்கூடாது.

சாதி சங்கங்கள்

சாதி சங்கங்கள்

நான் இதை எந்த புரிதலும் இல்லாமல் சொல்லவில்லை. பெரியார் கொள்கையை இவர்கள் முறையாக பரப்பியிருந்தால், இன்றைக்கு இத்தனை சாதி சங்கங்கள் வந்திருக்காது. ஐயப்ப பக்தர்கள் அதிகரித்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியா அளவில் கூட விஞ்ஞானத்தில் நாம் எந்த பங்களிப்பையும் செலுத்தவில்லை. இங்கு மாற்றம் வரவேண்டியது அவசியம்.

பகுத்தறிவாளர்கள்

பகுத்தறிவாளர்கள்

கடவுள் படம் ஒரு லட்சம் பேரையாவது பகுத்தறிவாளர்களா மாற்றியிருக்கும். கடவுள் 2 திரைப்படம் ஒரு கோடி பேரையாவது பகுத்தறிவாளர்களாக மாற்றும் என உறுதியாக நம்புகிறேன்.

ரிலீஸில் பிரச்சினை இருக்காது

ரிலீஸில் பிரச்சினை இருக்காது

எனது படத்துக்கு என குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் படத்துக்கு ஆதரவு தருவார்கள். அதனால் ரிலீஸில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. இந்த கோடை விடுமுறைக்கு படம் நிச்சயம் வெளிவரும்", என அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X