உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்படும் எஸ்எஸ் ராஜமவுலி...யார் அந்த கில்லாடி இயக்குனர்?
ஹைதராபாத் : இந்திய சினிமாவின் நம்பர் ஒன் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி. தோல்வி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து வருபவர்.
Recommended Video
மார்ச் 25ஆம் தேதி அவர் இயக்கிய RRR படம் பெரும் எதிர்பார்ப்போடு இந்தியா முழுவதும் ரிலீசாக தயாராக இருக்கிறது. இதற்காக அவர் பல தனியார் சேனல்களுக்கு குழு உடனும் தனியாகவும் பேட்டி அளித்து வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட இன்டர்வியூவில் தெலுங்கின் மற்றொரு வளர்ந்து வரும் நம்பிக்கை இயக்குனருடன் உரையாடுகையில் தான் உதவி இயக்குனராக வேலை செய்யும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு புயலான அறிமுகமான இயக்குனர் சந்தீப் ரெட்டி இவர் ஆஸ்திரேலியாவில் சினிமாவிற்கான படிப்பை முடித்தவர். அர்ஜுன் ரெட்டி படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தாலும் வெளியான சில நாட்களிலேயே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று படம் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கு சினிமா இலக்கணத்தை உடைத்து ரசிகர்களிடம் புது அலையை உருவாக்கியது.

ராஜமவுலி புகழாரம்
தெலுங்கு திரைத்துறையில் அர்ஜுன் ரெட்டி படம் ஒரு புது ரத்தம் பாய்ச்சியது. பல முன்னாள் இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்கள் யார் இவர் என கேட்கும்படி செய்தார் சந்தீப் ரெட்டி வங்கா. தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகமே இவரை கவனிக்க ஆரம்பித்தது. படம் ரிலீஸ் ஆன பிறகு எஸ்எஸ் ராஜமவுலி அளித்த ஒரு பேட்டியில் தனக்குப் போட்டியாக வரும் தகுதி சந்தீப் ரெட்டி வங்காவிற்கு இருக்கிறது என சொல்லியிருக்கிறார். ராஜமவுலி இப்படி ஒருவரை சொல்வது மிக அரிது என சினிமா வட்டாரங்களில் அப்போதே முணுமுணுத்தது குறிப்பிடத்தக்கது.

Pan India Director
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் களமிறங்கினார் சந்தீப் ரெட்டி வங்கா . அதே அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்த அந்தப் படமும் இந்தியில் சூப்பர் ஹிட்டானது. அங்கேயும் இந்த இயக்குனர் பரபரப்பாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ‘ அனிமல் ‘ என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாகுபலி புகழ் பிரபாஸை கதாநாயகனாக வைத்து ‘ ஸ்பிரிட் ‘ எனும் Pan India படத்தை இயக்க உள்ளார். இன்னும் சில வருடங்களில் சந்தீப் ரெட்டி வங்க இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RRR பிரமோஷன்
ரிலீசுக்கு தயாராக இருக்கும் RRR படத்துக்காக ராஜமௌலியை அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா பேட்டி எடுத்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு ராஜமவுலி சுவாரசியமான பதில் அளித்துள்ளார். அப்படி கேள்வி பதிலுக்கு இடையில் உங்கள் அடுத்த படத்தில் ஒரு 25 நாட்கள் நான் உங்களிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் நீங்கள் அதற்கு அனுமதி தரவேண்டும் என சந்தீப் ரெட்டி வங்க கேட்டதும் ராஜமவுலி அதே வேகத்தில் அவர் கேட்டது போல நீங்கள் இயக்கும் படத்தில் என்னை உதவி இயக்குனராக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என சொன்னதும் சந்தீப் ரெட்டி வங்கா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார். இவ்விருவரும் பங்கேற்ற இன்டர்வியூ வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











