இனிமேல் ஜாலியோ ஜாலிதான்.. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பறந்த அமீர்- பாவனி ஜோடி!

சென்னை: நடிகை பாவனி ரெட்டிக்கும் நடன இயக்குநர் அமீருக்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது, இருவரும் ஹனிமூனை கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார்கள். அமீர், பாவனியை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் அந்த காதல் தற்போது கைகூடி, இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டவர் தான் நடிகை பாவனி ரெட்டி. இவரின் க்யூட்டான அழகைப்பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி, பாவனி ஆர்மியே உருவானது. இந்த ஆர்மி பாவனியின் அழகான ரியாக்ஷன்களை எல்லாம் வீடியோவாக வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாக்கினார்கள். இந்த வீடியோவை பார்த்து வியந்து போன அமீர், யாருடா இந்த பொண்ணு என நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிக்கும் நோக்கத்தோடு தான் வந்தார்.

Pavani reddy Ameer

அமீர், பாவனி ரெட்டி: பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும், தனது காதலை சொல்லி, பாவனி ரெட்டிக்கு முத்தமும் கொடுத்தார். இருந்தாலும், காதலில் விருப்பம் இல்லை என்று சொன்ன பாவனி, பிக் பாஸ் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் அமீரின காதலை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கடந்த 20ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அமீர் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், அமீரை வளர்த்தவர் முஸ்லிம் என்பதால், இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார் அமீர். இருப்பினும், பாவனி விருப்பப்படி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், பிரியங்கா, அமீரின் சகோதரியாக இருந்து நாத்தனார் முடிச்சு போட்டார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் கணவர் வசி மற்றும் ஏராளமான சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஹனிமூன்: தற்போது அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் பேட்டி அளித்துள்ளனர். அதில், ஹனிமூன் பற்றி பேசி உள்ள பாவனி, திருமணமான 30 நாட்களுக்கு பிறகு, அமேசான் காட்டுக்கு ஹனிமூன் செல்ல இருக்கிறோம். எங்களுக்கு அதுபோன்ற இடம் தான் பிடிக்கும், அந்த இடத்தில பல ஜந்துக்கள், பல விலங்குகளை பார்க்க போகிறோம் என காமெடியாக கூறியிருந்தார். பாவனி மீதான காதல் குறித்து பேசிய அமீர், பாவனி ரொம்ப ஸ்ட்ராங்கனான லேடி, எங்களுக்குள் எவ்வளவு தான் சண்டை வந்தாலும், அதை உடனே மறந்துவிடுவார். பாவனியை எப்போது நான் பார்த்தேனோ அப்போதில் இருந்தே அவர் மீது ஒரு இனம் புரியாத காதல் இருந்தது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போதே, அவங்க ஒரு நடிகை, நான் ஒன்னுமே இல்லாதவன். அப்போதும், என் மீது பாவனி அன்பும் மரியாதையும் வைத்து இருந்தார். திருமணத்திற்கு தேதி குறித்ததில் இருந்து மனதிற்குள் ஒருவிதமான பயம் இருந்து கொண்டே இருந்தது. எந்த விதத்திலும் சொதப்பிவிடக்கூடாது, யாரையும் கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருந்தோம், முடிந்த வரையில் அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்துவிட்டோம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்றார் அமீர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X