பீஸ்ட் படத்தை நெல்சன் எந்த ஷோ பார்ப்பார் தெரியுமா...சுனில் சொன்ன சுருக்கமான ரகசியங்கள்

சென்னை: குவைத்தில் பீஸ்ட் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது தேவையில்லாதது என்று பீஸ்ட் பட நடிகரும், மலேசியா டூ அம்னீஷியா படத்தின் தயாரிப்பாளரும் ஆன சுனில் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் சண்டைக்காட்சிகள் மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பீஸ்ட். சமீபத்தில் இந்த படத்தின் டிரைய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லர் பல்வேறு சாதனைகளை இணையத்தில் நிகழ்த்தியுள்ளது. சமீபத்தில் Zee 5 OTT Launch சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பீஸ்ட் பட காமெடி நடிகர் சுனில் ரெட்டி நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.

மலேசியா டூ அம்னீஷியா

மலேசியா டூ அம்னீஷியா

கேள்வி: உங்களுக்கும், Zee 5 நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு,உறவு எப்படி பலம் பெற்று இருக்கு ?

பதில்: நான் மலேசியா டூ அம்னீஷியா என்ற காமெடி படத்தை தயாரித்தேன்.அப்படமானது Zee 5 ஒடிடி தளத்தில் வெளியானது. Zee 5 நிறுவனம் அப்படத்திற்கு நல்ல புரோமேஷன் வழங்கினர். அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமாத்துறையினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கும், zee 5 நிறுவனத்திற்கும் இடையே நல்ல Relationship என்றும் என்றென்றும் உள்ளது.

டான்ஸ் பிரமாதம்

டான்ஸ் பிரமாதம்

கேள்வி: சமீபத்தில் நீங்கள் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளீர்கள். படம் எப்படி வந்துள்ளது?

பதில்: நான் பீஸ்ட் படத்தில் காமெடி ரோல் செய்துள்ளேன். படம் ரொம்ப அருமையாக வந்துள்ளது. நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார். அவருடைய டான்ஸ் பிரமாதமாக வந்துள்ளது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஒரு ரசிகனாக படத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்.

கடைசியில் நிற்கக்கூடாதா?

கடைசியில் நிற்கக்கூடாதா?

கேள்வி: நடிகர் விஜய் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: பொதுவாக நடிகர் விஜய் அதிகமாக பேச மாட்டார். இது சினிமாத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பீஸ்ட் படத்தில் ஒரு காட்சியில் அனைவரும் வரிசையாக நிற்போம். நான் தான் கடைசியாக நின்றேன். நடிகர் விஜய் எங்கு நிற்பார் என்று யோசித்தேன். பின்பு தான் எனக்கு தெரிந்தது எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். நீங்கள் ஏன் கடைசியில் நிற்கின்றீர்கள் என்று கேட்டேன். ஏன் நான் நிற்கக்கூடாதா? என்றார். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது அந்த அனுபவம்.

முதல் நாள், முதல் ஷோ

முதல் நாள், முதல் ஷோ

கேள்வி: பீஸ்ட் படத்தை எப்போது,எங்கு பார்க்க போகிறீர்கள்?

பதில்: இயக்குனர் நெல்சனிடம் பேசினேன். முதல்நாள் முதல் ஷோவை பார்க்கலாம் என்றேன். அவர் அடுத்த ஷோவுக்கு வருவதாக தெரிவித்தார். சரி டிக்கெட் கொடுத்து அனுப்புங்கள் என்று கூறியுள்ளேன். சிரித்தபடி பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

குவைத்தில் வெளியிட தடை

குவைத்தில் வெளியிட தடை

கேள்வி: குவைத்தில் பீஸ்ட் படத்தை வெளியிட தடை விதித்துள்ளார்கள். இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: பீஸ்ட் படத்தில், எந்தவொரு காட்சியும் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக இடம்பெறவில்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தில் உள்ளது போன்ற காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை. உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றார்.

மாஸாக இருக்கும்

கேள்வி: பீஸ்ட் படத்தில் உங்களுக்கு பிடித்த சீன் எது?

பதில்: டிரெய்லரில் வரும் விஜய் சண்டைக்காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த காட்சிகள் பெரும் மாஸாக இருக்கும். அந்த ஷூட்டிங்போது நான் அருகில் இருந்தேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=muoi0QIXb2k&t=167s இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் பீஸ்ட் பட நடிகரும், மலேசியா டூ அம்னீஷியா படத்தின் தயாரிப்பாளருமான சுனில் ரெட்டி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X