விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? மருத்துவர் கொடுத்த விளக்கம்!

சென்னை: இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி,வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்த திரைப்படம் மத கஜ ராஜா. 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய, விஷால், கை நடுங்கியபடி பேசி இருந்தார். இப்போது தொகுப்பாளினி டிடி அவர் வைரஸ் காய்ச்சலுடன் வந்து இருப்பதாக கூறினார். விஷாலின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசு பொருளாகி, அவரின் உடல்நிலை குறித்து, மோசனமாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ யூடியூப் சேனலுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஒரு மருத்துவராக நான் விஷாலை பார்க்கும் போது அவருக்கு ஏதோ ஒரு உடல்நிலை பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. நாங்கள் கை நடுக்கத்துடன் இருக்கும் ஒருவரை பார்த்தால் சர்க்கரை வியாதி அல்லது மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் 5 நாட்கள் இருந்தாலும், அதில் இருந்து மீண்டு வரும் போது இதுபோன்ற கை நடுக்கம், உடல் வலி, முக வீக்கம் எல்லாம் இருக்கும். அதில் இருந்து குணமாக பத்து நாட்கள் கூட ஆகலாம். சிலரால் நடக்கமுடியாத அளவிற்கு கூட அவர்கள் மிகவும் வீக்காகி விடுகிறார்கள். விஷாலுக்கு வந்து இருப்பது ஒரு சாதாரணமான காய்ச்சல் என்றால், நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு சாப்பிட்டால் விரைவில் சரியாகி விடும். ஆனால், இது மதுவால் வந்த பிரச்சனை என்றால், அதில் இருந்து அவர் முழுமையாக விடுபட்டு வந்தால் மட்டும் தான் குணமடைய முடியும்.

vishal fever doctor jayashree

கல்லீரல் பாதிக்கும்: மது அருந்துபவர்களுக்கு பெருங்குடல் புண்ணாகிவிடும் அதில் இருந்து புண் சரியாக 3 நாட்கள் ஆகும். குடலின் முக்கியமான வேலையே, நம் சாப்பிடும் உணவில் இருந்து முக்கியமான சத்துக்களை எல்லாம் உறிஞ்சி எடுக்கும். ஆனால், குடல் புண்ணாக இருக்கும் போது அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து எந்த ஒரு சத்தும் கிடைக்காது. இதே போன்று தொடர்ந்து ஒருவர் மது அருந்திக்கொண்டே இருந்தால் அந்த நபரின் நிலைமை என்னாகும். அடுத்து கல்லீரல், அதன் வேலையே நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கெமிக்கலை எடுப்பது தான். தொடர்ந்து மது அருந்துவதால், கல்லீரலுக்குள் அல்கஹால்கள் உள்ளே சென்று கொஞ்சம் கொஞ்சமாக அதன் செல்லை அழித்துவிடும். ஒரு கட்டத்தில் லிவரில் வேலை செய்யக்கூடிய எந்த செல்லுமே இருக்காது.

மன உளைச்சல் ஏற்படும்: வெற்றி என்பது ஒரு மனிதனுக்கு உத்வேகத்தையும் மன சந்தோஷத்தையும் அளிக்கும். ஒரு சிறிய வெற்றி கூட மனதிற்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தரும். அதேபோலத்தான் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்கும். இதனால் மன உளைச்சலால் ஏற்பட்டு தூக்கம் இன்மை, பசியின்மை உருவாக்கும், ஒரு மனிதன் சராசரியாக 5 மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்படி தூங்கவில்லை என்றால் அதுவே பெரிய வியாதியை ஏற்படுத்த விடும். இதனால் அதிலிருந்து விடுபட மது போன்ற தவறான பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். இதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அதில் இருந்து விடுபடுவது தான் சரியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X