ராதிகாவின் நிறைவேறாத காதல்.. தமிழ் சமூகத்தையே குட்டிச்சுவராக்கினார்.. பிரபலம் ஓப்பன் டாக்!

சென்னை: நடிகை ராதிகா சரத்குமாருக்கு நிறைவேறாத காதல் ஒன்று இருந்தது என்று டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். இவருடைய தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, சகோதரி நிரோஷா ஆகியோரும் திரைத்துறையில் பிரபலமானவர்களாகவே உள்ளனர்.

ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் ராதிகா. 80, 90களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்த இவர், 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் படுபிசியாக நடித்து வருகிறார்.

Dr Kantharaj interview About Radhika Sarathkumars Marriage And Love story

சமுதாயமே குட்டிச்சுவராக்கினார்: இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ராதிகா குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அதில் ராதிகா சினிமாவில் கொடிகட்டி பறந்தது போல, சின்னத்திரையிலும் கொட்டி கட்டி பறந்தார். நமது தமிழ்ச் சமுதாயமே குட்டிச் சுவராகி நாசமாக போனதற்கு முக்கிய காரணமே ராதிகா தான், இவர் இயக்கிய சித்தி சீரியலை பார்த்த பிறகுதான், மக்களுக்கு சீரியல் மீது ஆர்வமே ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்தடுத்து இயக்கிய அனைத்து சீரியல்களும் ஹிட், அந்த தாக்கம் தற்போது வரை தொடர்ந்து, பலரும் அதில் இருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சீரியல் உலகின் தாய் என்று ராதிகாவை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய நடிகை: ராதிகா ஒரு திறமையான நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால், பாரதி ராஜா அறிமுகப்படுத்தியதில் அழகு குறைவான நடிகை ராதிகா தான். இதை அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால், கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தவரே இவர் தான். ஆனால், அந்த காலகட்டத்தில் ராதிகாவின் பெயர் அடிக்கடி செய்தியில் அடிபடும் பெயராகவும், சர்ச்சைக்குரிய நடிகையுமாக இருந்தார்.

நிறைவேறாத காதல்: நடிகை ராதிகாவிற்கு நிறைவேறாத காதல் ஒன்று இருந்தது. அவர் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்தார். இவர்களில் காதல் திருமணம் வரை சென்றது. அப்போது தான் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருப்பது தெரிந்து ராதிகா அவரிடம் இருந்து விலகினார். இதையடுத்து, பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவரை விட்டு பிரிந்தார். ராதிகாவை பிரிந்தவுடனே பிரதாப் போத்தன், வேறு ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இதனால், கடுப்பான ராதிகா லண்டன் சென்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்டார், அவர் தான் ரிய்யான். ஆனால், அந்த வாழ்க்கையும் கசந்து போனதால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறான் என்று டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X