25 வருஷம் வாழ்ந்த மனைவியை கொச்சையா பேசுறாங்க.. இது விஜய்க்கு ஹர்ட் ஆகலையா? ஷர்மிளா கேள்வி!

சென்னை: 25 ஆண்டு வாழ்ந்த மனைவியை கொச்சையாக, அசிங்கப்படுத்தி தவெக தொண்டர்கள் பேசுகிறார்கள், இது விஜய்க்கு ஹர்ட் ஆகவில்லையா? என டாக்டர் ஷர்மிளா விஜய்யை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவும் செய்திக்கு பேசினார். சமீபத்தில் வரும் சில பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா. ஹர்ட் ஆகாதீங்க அந்த ஒன்றும் 'WORTH' இல்லை என்று பேசி இருந்தார்.

தரக்குறைவான விமர்சனம்: இதுகுறித்து டாக்டர் சர்மிளா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தவெக தலைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சை சென்று கொண்டு இருக்கிறது. அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் பேசவில்லை. தற்போது, விஜயின் மனைவி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அவர் சொன்னது பொய்யா.. உண்மையா.. என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால் உங்களுடைய மனைவியை உங்களுடைய தொண்டர்கள் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள். அது குறித்து ஒரு அறிக்கை கூட இதுவரையில் நீங்கள் வெளியிடவில்லை. அது எங்களுடைய தனிப்பட்ட விஷயம், அதை பற்றி யாருமே பேசக்கூடாது என குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது நீங்கள் வெளியிட்டு இருக்க வேண்டும்.

Vijay sangeetha Dr Sharmila
Photo Credit:

ஹர்ட் ஆகவில்லையா?: மனைவி குறித்து அவதூறாக பேசுவதை அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நேற்று மேடையில் தொண்டர்கள் ஹர்ட் ஆவார்கள் என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறீர்கள். உங்களுடன் 25 வருடம் வாழ்க்கையில் நடத்திய அந்த பெண்ணும் உங்களின் குழந்தைகளும் எவ்வளவு ஹர்ட் ஆவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா? மனைவியை கொச்சையாக பேசுவது எல்லாம் விஜய்க்கு ஹர்ட் ஆகவில்லையா? விஜய் பற்றி எந்தவிதமான சர்ச்சை வந்தாலும் அதை திமுக தூண்டிவிடுகிறது என்கிறார். அப்படி சர்ச்சைகள் வரும் போது முதலில் விஜய் அமைதியாக இருந்து தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்துவிட்டு அதற்கு ஏற்றால் போல இது திமுகவின் சதி என சொல்லி அதில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்.

ஷர்மிளா கேள்வி: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குகிறார்கள். ஓசி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என பேசிவிட்டு நேற்று குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 தருவதாக பேசி இருப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது என்று டாக்டர் ஷர்மிளா பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X