Draupathi 2 Review : திரௌபதி 2 விமர்சனம்.. வொர்த்தா? இல்லையா? செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: 'திரௌபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரௌபதி 2வது பாகத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில், ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா, அருணோதயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் இப்படம் குறித்து செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.
திரௌபதி முதல் பாகத்தில் சொல்லப்பட்டது போல இரண்டாம் பாகத்திலும் நாடக காதல் பற்றி சொல்லப் போகிறீர்களா என மோகன் ஜியை பலர் கேள்வி கேட்டிருந்தனர். ஆனால், ஜி. மோகன், 14 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில புனை கதைகளை சேர்த்து திரௌபதி 2 படம் எடுக்கப்பப்பட்டுள்ளது. பெரிய பொருட் செலவில் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் என மோகன் ஜி பாடத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

திரௌபதி 2: திரௌபதி படம்14 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு, காடவராயர்கள், வீர வல்லவராயர்கள், சம்பூர்வராயர்கள் ஆகியோர் குறுநில மன்னர்களாக இருந்தபோது சுல்தானுடைய படை எடுப்பு தென் பக்கம் திரும்பியது. ஒரு பக்கம் இந்துக்களினுடைய கடவுளின் சிலைகளை உடைத்தார்கள், மற்றொரு பக்கம் கடுமையான வரிகளை விதித்தார்கள். வரி கட்ட முடியவில்லை என்றால் எங்களுடைய மதத்திற்கு மாறினால் வரி இல்லை என்ற வகையில் மதத்தை பரப்பினார்கள் என்ற கதையை மோகன் ஜி சொல்லியிருக்கிறார்.
பிளஸ் & மைனஸ்: 14 நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் படத்தினுடைய செட், சிஜி வேலைகள், அரண்மனை, குதிரை, உடை, என அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். படத்திற்கு ஜிப்பரானின் இசை கூடுதல் பலமாக உள்ளது. குறிப்பாக 'எம்கோனே' படம் ரசிக்கும் படி இருக்கு. அது மட்டுமல்லாமல் படத்தினுடைய கதையும் ஒரே சீராக செல்கிறது. சமகாலத்தில் நடக்கும் கதையை இருந்து தொடங்கப்பட்டு, பிளாஷ் பேக்கிற்குள் கதை சென்று விறுப்பான திருப்பத்துடன் இடைவேளை வருகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் முதல் பாதியில் சொன்னதே திருப்ப திருப்ப வருவது போல காட்சி வருவதால் படத்தின் பல இடத்தில் பார்த்த காட்சி போல இருக்கிறது. அதே போல, படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரம் எதற்கு வருகிறார் என்று நினைக்க தோன்றுகிறது.
நல்ல சரித்திர படம்: மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மோகன் ஜி யின் படம் இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணத்தை இந்த படம் மாற்றி உள்ளது. இந்த படத்தில் மதத் சார்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி உள்ளார். ஆனால் படத்தினுடைய திரைக்கதையில் இன்னும் கவனத்தை செலுத்தி இருக்கலாம். அதைத்தாண்டி படம் 2.45 என படம் கொஞ்சம் நீண்டு விட்டது. அதை கொஞ்சம் குறைத்து இருந்தால், சுப்பரான ஒரு சரித்திரப்படமாக திரௌபதி படம் இருந்து இருக்கும் என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











