திரெளபதி படத்தில் அந்த போலீஸே இவர்தான்.. யார் இந்த நிஷாந்த்.. ரேணிகுண்டா ஞாபகம் இருக்கா?
சென்னை: சமூக வலைதளத்தில் இன்றைய ஹாட் டாபிக்கே திரெளபதி படம் தான். பாஜகவை சேர்ந்த எச். ராஜா, காயத்ரி ரகுராம் மற்றும் பாமக ராமதாஸ் என பலரும் இந்த படத்திற்கு எக்கச்சக்க ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
இந்த படம் ஒரு குப்பை படம் என்றும் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன், ட்வீட் பட்டு கடும் சர்ச்சையில் சிக்கினார். பா. ரஞ்சித், இந்த படம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என பேசி இருந்த வீடியோக்களையும் ஒரு சாரார் தற்போது ட்விட்டரில் போட்டு கிழித்து வருகின்றனர்.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்ற ரேஞ்சுக்கு மீம்களும், ட்ரோல்களும் பறக்கின்றன.
ஆணவக் கொலைகளை சினிமாவாக எடுத்து பல திரைப்படங்கள் பாராட்டு பெற்ற நிலையில், நாடக காதலை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் தான் திரெளபதி.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக வரும், நிஷாந்த், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
ரேணி குண்டா படத்தில், சிறுவனாக நடித்த நிஷாந்த், பல படங்களில், ரவுடியாகவும், வில்லனாகவும் நடித்து வந்த நிலையில், தற்போது, முதன்முறையாக இந்த படத்தில் போலீஸாக மிரட்டியுள்ளார்.
அவரது முழுமையான நேர்காணலை காண, வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











