ஏமாத்துவாங்க.. பெண்கள் தான் உஷாரா இருக்கணும்.. திரெளபதி பட நடிகை போல்டான பேட்டி!
சென்னை: திரெளபதி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நிவ்யா திரெளபதி படம் குறித்தும், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் தொல்லைகள் குறித்தும் ரொம்ப போல்டாக பேசி உள்ளார்.
Recommended Video
ஜி. மோகன் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள திரெளபதி படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது.

திரெளபதி திரைப்படத்தை தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் நாடு முழுவதும் படத்துக்கு நல்ல ஓபனிங் மற்றும் வசூல் கிடைத்துள்ளது.
கூடவே, திரெளபதி திரைப்படம், சாதி படமா? இல்லையா? என்ற விவாதத்தையும் முன் வைத்துள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் பரிதாபத்தை பெற்ற நடிகை நிவ்யா, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
வீடியோ புரொமோவில் பயந்த பெண் போல நடித்து ஏமாற்றிய நிவ்யா, சமூகத்தில் பெண்களை ஏமாற்ற பலர் திரிவதாகவும், பெண்கள் தான் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மொபைல் போன், சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத ஆண்கள் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தால், தயக்கம் காட்டாமல், உங்களுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்தி பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
திரெளபதி படத்தில், தான் நடித்த மனதை உருக வைக்கும் கண்ணீர் காட்சியை அப்படியே இந்த பேட்டியிலும் நடித்து காட்டி அசத்தி உள்ளார். அவரது வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











