அய்யய்யோ விட்ருங்க.. அலறிய திரெளபதி நடிகை.. என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க!
சென்னை: மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் திரெளபதி.
சமூக வலைதளத்தில், திரெளபதி படம் குறித்த காரசாரமான விவாதங்கள் வைரலாகி வருகின்றன.

பா. ரஞ்சித், மூடர் கூடம் நவீன் உள்ளிட்ட இயக்குநர்களை டேக் செய்து, திரெளபதி இயக்குநர் நவீன், படத்தை வந்து பார்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
திரெளபதி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கிராம புறங்களில் இந்த படத்துக்கான ஆதரவு ஒரு பிரிவினரிடையே வலுத்து வருவதாகவும், மற்றொரு பிரிவினர் இந்த படத்துக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, தனது தம்பி ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள திரெளபதி படத்தை குடும்பத்தாருடன் தியேட்டருக்கு சென்று பார்த்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
திரெளபதி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை நிவ்யா, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமீ பீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியின் வித்தியாசமான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பேட்டி எடுக்க சென்றவர்களை, பார்த்து, அய்யோ.. வேண்டாம்.. விட்ருங்க.. என நடிகை நிவ்யா அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் பேட்டியின் போது, நடந்தது, என்று தெரிந்து கொள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்க..


Click it and Unblock the Notifications











