ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷுக்கு நான் தான் வாய்ஸ்.. பிரபல டப்பிங் கலைஞர் கீர்த்திகா உதயா பேட்டி!

சென்னை: பிரபல டப்பிங் கலைஞர் கீர்த்திகா உதயா அளித்துள்ள பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Jyothika ok...Ramya Krishnan எப்படி ? | Dubbing artist Keerthika | Filmibeat tamil

குயின் வெப்சீரிஸில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு டப்பிங் பேசி அசத்தி உள்ள இவர், இயக்குநர் ஏ.எல். விஜய்யின் அண்ணன் உதயாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் தாண்டவம் படத்தில் டப்பிங் பேசத் தொடங்கிய இவர், விக்ரம் வேதா, கே 13 மற்றும் விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சக்ரா உள்ளிட்ட படங்களில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கும் டப்பிங் பேசியுள்ளார்.

Dubbing artist Keerthika Udhaya exclusive interview!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இன்னமும் ரிலீசாகாத இனம் படத்திற்கும் இவர் டப்பிங் பேசியுள்ளார்.

ரொம்ப க்யூட்டா அழகா இருக்க நீங்க ஏன் நடிக்க வரலை என கேட்ட கேள்விக்கு? நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணம் தனக்கே வரவில்லை என செம காமாகவும், க்யூட்டாகவும் கூறுகிறார்.

தனது கணவர் இயக்கிய முதல் படமான ரா ரா படத்தில் நாயகிக்கு டப்பிங் பேச முயற்சி செய்தபோது, செட் ஆகவில்லை என கணவரே ஆடிஷனில் தன்னை ரிஜெக்ட் செய்தது முதல், அதில் இருந்து தனக்கு வராது என்ற கலையை வரவழைத்துக் கொள்ள தான் மேற்கொண்ட முயற்சிகளையும், தனக்கு உதவியாகவும் குருவாகவும் இருந்தது பிரபல டப்பிங் ஆர்டிங்ஸ்ட் சபிதா என்பதையும் பேட்டி முழுவதும் மறக்காமல் நினைவு கூர்ந்துள்ளார்.

தன்னுடைய படங்களில் தானே டப்பிங் பேசி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள குட் லக் சகி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு முதன்முதலாக டப்பிங் பேசிய அனுபவங்களையும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ், யூனியன், இயக்குநர் என அனைவரையும் கீர்த்தி சுரேஷ் வாய்ஸ் பேசி திருப்தி செய்து விட்டேன் என்றும், ஆனால், அவருடைய ரசிகர்களை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்கிற பயம் தான் தனக்கு இப்போ இருக்கு என்றும் அழகாகவும், அமைதியாகவும் பேசும் கீர்த்தியின் பேட்டியை மறக்காமல் பார்த்து மகிழுங்கள்!

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X