twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிக்க வந்து டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன மதன் மகாராஜா... இந்த பிரபல ஹீரோக்களுக்கு இவர்தான் வாய்ஸ்!

    |

    சென்னை : சமீபத்தில் உலகம் முழுவதும் பட்டையைக் கிளப்பிய மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸில் பெர்லின் கதாபாத்திரத்திற்கு தமிழ் குரல் கொடுத்தவர் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மதன் மகாராஜா.

    ஜாக்கி ஷராஃப் முதல் அமித் பார்கவ் வரை எக்கச்சக்கமான நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

    காட்டன் சேலையில் நச்சுன்னு வளைவு நெளிவை காட்டிய ஐஸ்வர்யா மேனன் ..! காட்டன் சேலையில் நச்சுன்னு வளைவு நெளிவை காட்டிய ஐஸ்வர்யா மேனன் ..!

    மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மதன் மகாராஜா அளித்துள்ள பேட்டியில் சுவாரசியமான பல தருணங்களை பகிர்ந்துள்ளார்.

    கம்பீரமான குரலின்

    கம்பீரமான குரலின்

    சினிமா,வெப்சீரிஸ்,சீரியல்கள் என அனைத்திலும் தனது கம்பீரமான குரலின் மூலம் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வருபவர் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மதன் மகாராஜா. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் இப்பொழுது முன்னணி டப்பிங் ஆர்டிஸ்ட்களில் ஒருவராக உள்ளார். தமிழ் சினிமா முதல் பாலிவுட்,ஹாலிவுட் மற்றும் கார்ட்டூன் திரைப்படங்கள் என இவர் பிரபலமான பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

    அமித் பார்கவ் குரல்

    அமித் பார்கவ் குரல்

    பாலிவுட்டில் பிரபலமான நடிகராக உள்ள ஜாக்கி ஷராஃப் நடிக்கும் தமிழ் படங்களுக்கு பெரும்பாலும் மதன் மகாராஜா தான் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். அதேபோல விஜய் டிவியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் வரும் கதாநாயகன் அமித் பார்கவ்-க்கும் குரல் கொடுத்தது இவர்தான். இதேபோல பேரழகி சீரியலில் ஹீரோவுக்கு மதன் மகாராஜா தான் ஹஸ்கி குரலில் பின்னரே குரல் கொடுத்திருப்பார்.

    பெர்லின் கதாபாத்திரம்

    பெர்லின் கதாபாத்திரம்

    சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பட்டையைக் கிளப்பிய மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸில் எந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது பலரும் அறிந்ததே. அதில் வரும் பெர்லின் கதாபாத்திரம் ரசிகர்களின் ஃபேவரைட்களில் ஒன்றாக உள்ளது. பெர்லின் கதாபாத்திரத்திற்கு தமிழ் பின்னணி குரல் கொடுத்தவர் மதன் மகாராஜா.

    சிறிய வசனம் பேசும் வாய்ப்பு

    சிறிய வசனம் பேசும் வாய்ப்பு

    இவ்வாறு பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வரும் மதன் ராஜாவிடம் நீங்கள் எப்படி டப்பிங் ஆர்டிஸ்டாக ஆனீர்கள் என்று கேட்டதற்கு... நான் சென்னைக்கு நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். விஜயகாந்தின் ஆனஸ்ட்ராஜ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கணபதி எனது மிகவும் நெருங்கிய நண்பர் டப்பிங் ஆர்டிஸ்ட் கூட. ஒரு நாள் அவருடன் அலுவலகத்திற்கு சென்ற இடத்தில் அன்று வரவேண்டிய டப்பிங் ஆர்டிஸ்ட் வராததால் அவருக்கு பதிலாக சிறிய வசனம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஸ்டுடியோவுக்குள் நின்று கொண்டு சிங்கம் சூர்யா வசனத்தை முணுமுணுத்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன்.

    மாஸ்டரில் சிறு வேடத்தில்

    எனது குரலை பார்த்துவிட்டு நண்பர் உங்களின் குரல் மிக நன்றாக உள்ளது. நீங்க ஏன் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக ஆகக்கூடாது எனக் கேட்டார். திடீரென அப்படி கேட்டதும் சற்று தயங்கினேன் நடிக்க தானே வந்தோம் என்று . பின் யோசித்து பார்த்தேன் டப்பிங்கும் நடிப்பில் ஒரு பகுதிதான் என்பதை அறிந்து இப்பொழுது வெற்றிகரமான டப்பிங் ஆர்டிஸ்டாக மாறியுள்ளேன் என கூறியிருந்தார். மதன் மகாராஜா விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த காட்சி எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டப்பிங் துறையை போலவே மிக நடிப்பில் ஒரு பகுதிதான் தமிழ் சினிமாவிலும் நினைத்தது மாதிரி நடிகராக தனி இடத்தை மதன் மகாராஜா பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Noted Dubbing Artist Madan Maharaja is familiar for these special reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X