டூடி" என்ற தலைப்பில் ஒரு படம்...நிறைய கிஸ், நிறைய ரொமான்ஸ் யார் இந்த கார்த்திக் ?
சென்னை: இளைய தலைமுறையினரின் இன்றைய காதல் பற்றி கண்ணாடி பிம்பம்போல் காட்டப்போகும் திரைப்படம் டூடி. சமீபத்தில் டிரைலர் வெளியாகி சமூகவளைதளங்களில் வைரலாகியுள்ளது.
திரைப்படத்தில் இடம்பெறும் "ரகசிய காதலனே வா வா" பாடல் இன்றைய காதலர்களின் ரிங்டோனாகவே இடம்பெறும் அளவுக்கு பலரது கவனத்தை பெற்று உள்ளது .
அறிமுக நாயகனாக கார்த்திக் மதுசூதன் நடிப்பில், Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ளது. கதைவசனம் , திரைக்கதை , மட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் வேறு யாருமல்ல, டூடி திரைப்பட நாயகன் கார்த்திக் மதுசூதனன் தான் . அவரிடம் படம் பற்றி பேசினோம்..

+2 ட்ராப்பவுட்
கேள்வி : உங்கள் பயணம் பற்றியும், படத்தின் பயணம் பற்றியும் சொல்லுங்களேன்?
பதில் : என் அப்பா சமையல்காரர். +2 ட்ராப்பவுட் நான். சமைக்கறது பிடிக்கும். நானே கேட்டரிங் ஆரம்பிச்சேன். அப்பறம் ஒரு பேஷனா ஆரம்பிச்சி வந்தது சினிமா. முதல்படமே பெஸ்ட்டா குடுக்கனும்ன்னு குறிக்கோளா வச்சி சிறப்பா பண்ணிருக்கேன். சென்னை -பெங்களூர் ல ஷூட் செஞ்சிருக்கோம். 7 நாட்கள் ல எடுக்கப்பட்ட படம் இது. சென்னை, பெங்களூர், கூர்க் போன்ற இடங்கள்ல ஷூட் பண்ணிருக்கோம் .

33 வயது காதலன்
கேள்வி : இந்த "ரகசியகாதலனே" என்ன சொல்ல வருது?
பதில் : ட்ரைலர்-ல பார்த்தா ஒரு ஆணோட பார்வையில இருக்கும். அந்த கேரக்டர் 33 வயது இருக்கும். ஒரு காதல்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு அவரோட பார்வையில சொல்லப்பட்டுருக்கும். ஆனா ஒரு பெண்ணோட பார்வையில வேற மாதிரி இருக்கும். முற்றிலும் மாறுபட்டதா இருக்க அந்த பகுதிதான் ரகசிய காதலன்.

அந்த லவ் வேற இது வேற
கேள்வி : ரதியே பாடல் பத்தி சொல்லுங்களேன் ?
பதில் : 33 வயசுக்கு முன்னாடி ஹீரோ பார்த்த பெண்கள், காதலிச்ச பெண்கள் எல்லாம் வேற, அதுக்கப்பறம் அவன் பாக்குற இந்த பெண், அவனுக்கு வித்யாசமா இருக்கும். அந்த உணர்வுகள அழகா கொடுக்குறதுதான் இந்த ரதியே பாடல். Nobody can live with anybody for a long time ங்கிற உண்மைய சொல்லக்கூடியது. இதோட விரிவாக்கம்தான் இந்த படம். முன்னாடில்லாம் 80s,90s ல காதலிக்கும்போது அங்க அன்பு மட்டும்தான் இருக்குமே தவிர வேறொன்னும் இருக்காது. ஆனா இன்னைக்கு எப்படின்னா, I hate you ன்னு அனுப்பறதுக்கு முன்னாடி அங்கருந்து அதே மெசேஜ் வந்துடும். அந்த மாதிரி இருக்கு இன்னைய காலகட்டம்.

எல்லாருக்குமே பிடிச்சது
கேள்வி : இந்த பாடலோட ரிலீஸ்
பதில் : அடுத்த வாரம் ரிலீஸ் பன்ற மாதிரி வச்சிருக்கோம். ஒவ்வொரு மாதமும் ஒரு புது அப்டேட், வேற சேனல்கள் லயும் ரிலீஸ் பண்ணலாம்ன்னு போட்டுக்காட்டினோம். எல்லாருக்குமே பிடிச்சது. ஆனா கடைசியா சொந்த தயாரிப்புலயே வெளியிடலாம்ன்னு முடிவு பண்ணி வெளியிடறோம். நிச்சயமா மக்களுக்கு பிடிக்கும்ன்னு நம்புறோம். அரவிந்த் பயங்கரமா லிரிக்ஸ் எழுதிருக்காரு. 2022 எங்களுடய இந்த படைப்பு முழுவதுமாக மக்கள் திரையில் காண தயார் செய்து வருகிறோம் .

ரொமான்ஸ் ல்லாம்.. ..
கேள்வி : நிறைய கிஸ், ரொமான்ஸ் ல்லாம் இருக்கமாதிரி தெரியுதே?
பதில் : எல்லாமும் தேவையான அளவு இருக்கும். இப்ப உள்ள ஜெனரேஷன்க்கு பிடிச்ச மாதிரி இருக்கும். கூடவே ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கோம். பிப்ரவரி ரிலீஸ் ஆகும். என்னோட முதல்படம் இதுதான். அடுத்த படம் வருமா வராதானு தெரியாது. ஆனா இதுல பெஸ்ட் குடுத்துருக்கேன். என்று காதலின் முழு வடிவமாக வரும் டூடி படத்தை காதலோடு பகிர்ந்தார் கார்த்திக்.இன்னமும் நிறைய விஷங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து உள்ளார் . முழு வீடியோவை காண பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று காணலாம் .


Click it and Unblock the Notifications











