'எனக்கேத்த ஜோடி காஜல்': சூர்யா

By Mayura Akilan

இயக்குநர் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா, காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள மாற்றான் திரைப்படத்தினை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். ஆந்திராவில் சூர்யா படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை “டூப்ளிக்கேட்" என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். ஆந்திராவில் “டூப்ளிகேட்" படம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

தெலுங்கில் டூப்ளிகேட் படம் வெளியாவது குறித்து ஐதராபாத்தில் சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது சூர்யா கூறியதாவது,

கே.வி.ஆனந்த், இயக்கத்தில் நான் இரண்டாவது முறை நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். காஜல் அகர்வால் எனக்கேற்ற பொருத்தமான ஜோடியாக உள்ளார். இப்படம் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோடையில் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளார். ஏற்கனவே கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X