எத்தனை நாய் பார்த்தாலும் இது போல வராது.. தேனியையே சல்லடை போட்ட எக்கோ படக்குழு

சென்னை: மலையாளப் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பும் மதிப்பும் உள்ளது. தமிழ் சினிமாக்கள் மாஸ் கமர்ஷியல் படங்களை நோக்கி நகர்ந்தாலும் அவ்வப்போது வரும் கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களை தியேட்டரில் குவிய வைக்கிறது. இப்படி இருக்கையில் பெரும்பாலான குறைந்த பட்ஜெட் மலையாளப் படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் வெளியான எக்கோ படம் திரைப்பட ரசிகர்களுக்கே பெரிய சர்ப்ரைஸ் தான்.

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குநர் டின்ஜித் அய்யத்தான் அண்மையில் அளித்த பேட்டியில் படத்திற்காக நாய்கள் வாங்க தமிழ்நாட்டின் தேனி பகுதிக்குத்தான் வந்தோம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, 'எக்கோ' திரைப்படத்தில் நாய்களே முதன்மைக் கதாபாத்திரங்கள். இத்தனை நாய்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளிப்பது படக்குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது. பயிற்சி அளிக்க எளிதான 'பெல்ஜியம் மலினாய்ஸ்' நாயினத்துக்குப் பதிலாக, தனித்துவமான ஒன்றை தேடினோம்.

Eko Movie Director Dinjith Ayyathan Recent Interview About Theni District Dogs
Photo Credit:

தேனி கொம்பை நாய்கள்: அப்போது 'கொம்பை' வகை நாய்கள் பற்றி தெரிய வர, தேனியிலிருந்து அவற்றை வாங்க பிளான் செய்தோம். அவற்றின் அதிக விலையால் பட்ஜெட் குறித்த கவலைகள் எழுந்தன. இதனால், 10 நாய்களை மட்டும் வாங்கிப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

பயிற்சி: கொம்பை நாய்களுக்கு ஒன்றரை வயதுக்குள் முழுமையான பயிற்சி அளிப்பது அவசியம்; இல்லை என்றால், ஒன்றரை வயதுக்குப் பின்னர் பயிற்சி தருவது மிகக் கடினம். அதற்கேற்பவே நாய்கள் கவனமாக தேர்வு செய்து வாங்கி வந்தோம். மேலும், காட்சிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நாய்க்கும் வெவ்வேறு வகையான பயிற்சிகளை பார்த்து பார்த்து கொடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த தகவல் மொத்த தமிழ்நாட்டிற்கும் தேனி மாவட்ட மக்களுக்கும் பெருமை தரக் கூடியதாக மாறி உள்ளது.

Eko Movie Director Dinjith Ayyathan Recent Interview About Theni District Dogs
Photo Credit:

குரியச்சன்: அதேபோல், எக்கோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. எனினும், கதையின் சில முக்கிய பகுதிகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இன்றைக்கு துபாய் செல்வது போல, பல மலையாளிகள் முன்னர் மலேசியா சென்று, மலேசியா பெண்களை காதலித்து திருமணம் செய்து அதன் பின்னர் கேரளாவுக்கு திரும்பி வந்தனர். அதை அடிப்படையாக வைத்து தான், குரியச்சன் - மிலாத்தி கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. நடிகர் ரகுவரனிடம் மலையாளப் படங்களில் காணப்பட்ட 'புத்துணர்ச்சி' சௌரபிடம் ஒத்துப்போனதால், குரியச்சன் பாத்திரத்திற்கு அவரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X