twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனை நோக்கி பாயும் தோட்டா…. இன்னும் எத்தன பேரை சுட்டு தள்ளப்போகுதோ

    |

    Recommended Video

    ஒருவழியா ரிலீஸ் ஆனது | Enai Noki Paayum Thota- Official Trailer| Dhanush| Megha Akash| Review

    சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதாநாயகன் இடையில் பனிப்போர் உருவாகியுள்ளது. தனுஷ் பேசிய சம்பள பேச்சு இப்போது சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது. சம்பளமே தராமல் பலர் ஏமாற்றுகிறார்கள் என்று சமீபத்தில் தனுஷ் பேசிய பேச்சுதான் இன்றைக்கு ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.

    ஒரு படம் வெளியானதும் சரியாக ஓடவில்லை அல்லது வசூலில் பின்தங்கி இருந்தால் அதை கண்டுகொள்ளாமலேயே தனது வேலை முடிந்தது என்று அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகி நடிக்க சென்று விடுகின்றனர் என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இயக்குனர் ஒரு பக்கம் கதாநாயகனை தாக்கும் நிலையில் மற்றொரு பக்கம் கதாநாயகன் படத்தின் தயாரிப்பாளரை தாக்கியுள்ளார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தில் நடித்த பிறகு தயாரிப்பாளர்களிடம் அதற்கான சம்பளத்தை பெறுவது என்பது சாதாரண காரியமே இல்லை என்று பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளார்.

    மூன்று ஆண்டுகளாக பெரும் போராட்டங்களுக்கு பிறகு வெளியாகவுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. பண நெருக்கடியால் இப்படம் வெளியாவதற்கு மிகவும் தாமதம் ஆன நிலையில் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் பல கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

     4வது முறையாக பேரை மாற்றிக் கொண்ட 'காதல் திருமணம்' சர்ச்சை நடிகை.. இப்போ என்ன பேர் தெரியுமா? 4வது முறையாக பேரை மாற்றிக் கொண்ட 'காதல் திருமணம்' சர்ச்சை நடிகை.. இப்போ என்ன பேர் தெரியுமா?

    ரொம்ப கஷ்டமப்பா

    ரொம்ப கஷ்டமப்பா

    அந்த வகையில் தற்போது ஒரு ஆங்கில இணையத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்தினை தமிழ் திரையுலக கதாநாயகர்களை சாடும் வகையில் அதிரடியாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுத்து அதை வெளியிட்டு அதிலிருந்து வசூல் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் அல்ல.

    அக்ரீமெண்ட் போட்டவுடன் அட்வான்ஸ்

    அக்ரீமெண்ட் போட்டவுடன் அட்வான்ஸ்

    இந்நிலையில் தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் பெரும் தொகையை சம்பளமாக பெறுகின்றனர். அதுவும் ஒரு படம் ஒப்பந்தம் ஆனவுடனேயே அட்வான்ஸ் என்று சம்பளத்தின் பெரும் தொகையை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி விடுகிறார்கள்.

    வேலை முடிந்தது

    வேலை முடிந்தது

    அப்படம் வெளியானதும் சரியாக ஓடவில்லை அல்லது வசூலில் பின்தங்கி இருந்தால் அதை கண்டுகொள்ளாமலேயே தனது வேலை முடிந்தது என்று அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகி நடிக்க சென்று விடுகின்றனர். படம் வெளியாவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை என்று மறைமுகமாக நடிகர் தனுஷை தாக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

    சம்பளம் வாங்குறது ரொம்ப கஷ்டம்

    சம்பளம் வாங்குறது ரொம்ப கஷ்டம்

    இயக்குனர் ஒரு பக்கம் கதாநாயகனை தாக்கும் நிலையில் மற்றொரு பக்கம் கதாநாயகன் படத்தின் தயாரிப்பாளரை தாக்கியுள்ளார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தில் நடித்த பிறகு தயாரிப்பாளர்களிடம் அதற்கான சம்பளத்தை பெறுவது என்பது சாதாரண காரியமே இல்லை.

    தனுஷால் யாருக்கும் லாபமில்லை

    தனுஷால் யாருக்கும் லாபமில்லை

    மேலும் பலர் சம்பளமே தராமல் ஏமாற்றியும் உள்ளனர், என்று தயாரிப்பாளர்களை சாடியுள்ளார். இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் தனுஷின் இந்த குற்றசாட்டிற்கு பதிலளித்துள்ளார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பல சமயங்களில் உதவியவர்கள். ஆனால் தனுஷால் ஒருவரும் லாபம் அடைந்ததில்லை.

    தயாரிப்பாளர்களை காணவில்லை

    தயாரிப்பாளர்களை காணவில்லை

    மேலும் அவர் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் தொடங்கி வடசென்னை படம் வரை செலவு செய்து படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் ஒருவர் கூட, இன்று திரையுலகிலேயே இல்லை என்றும் தனுஷை விளாசியுள்ளார்.

    மற்றுமொரு பக்கம் தயாரிப்பாளர் கே.ராஜன், ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பதற்கு பல கோடி ரூபாய் கடன் பெற்று படம் எடுக்கிறார்கள். அது கதாநாயகன், டைரக்டர் போன்றவர்களால் படப்பிடிப்பு தாமதமாவதால், வட்டி மீது வட்டி செலுத்தி பல கோடி நஷ்டம் அடைந்து கடைசியில் வீடு வாசல் என அனைத்தையும் இழந்து கடனாளி ஆகிறார்கள்.

    மற்றுமொரு பக்கம் தயாரிப்பாளர் கே.ராஜன், ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பதற்கு பல கோடி ரூபாய் கடன் பெற்று படம் எடுக்கிறார்கள். அது கதாநாயகன், டைரக்டர் போன்றவர்களால் படப்பிடிப்பு தாமதமாவதால், வட்டி மீது வட்டி செலுத்தி பல கோடி நஷ்டம் அடைந்து கடைசியில் வீடு வாசல் என அனைத்தையும் இழந்து கடனாளி ஆகிறார்கள்.

    மற்றுமொரு பக்கம் தயாரிப்பாளர் கே.ராஜன், ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பதற்கு பல கோடி ரூபாய் கடன் பெற்று படம் எடுக்கிறார்கள். அது கதாநாயகன், டைரக்டர் போன்றவர்களால் படப்பிடிப்பு தாமதமாவதால், வட்டி மீது வட்டி செலுத்தி பல கோடி நஷ்டம் அடைந்து கடைசியில் வீடு வாசல் என அனைத்தையும் இழந்து கடனாளி ஆகிறார்கள்.

    சொகுசு கார்களில் வலம்

    சொகுசு கார்களில் வலம்

    ஆனால், கதாநாயகர்களோ பல கோடி மதிப்புள்ள ஆடம்பர கார்களில் வந்து இறங்குகிறார்கள். பல கோடி சம்பாதித்த நடிகர்களும் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டத்தில் அவதிப்படுபவர்களும் உண்டு. தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, தனுஷ் தயாரிப்பாளர்களை சாடுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    புது சிக்கல் வருமா என்ன

    புது சிக்கல் வருமா என்ன

    தனுஷின் இந்த விமர்சனத்தினால் மேலும் பல தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தனுஷின் ரசிகர் கூட்டமோ அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கும் தனுஷிற்கும் இயக்குநருக்கும் இடையே உள்ள சர்ச்சை நீங்குமா, என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாவதில் ஏதாவது புது சிக்கல் வருமா, என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன.

    English summary
    Dhanush starrer 'Enai Noki Paayum Thota' directed by Gautham Vasudev Menon is slated for release on September 6. The controversy between the film's producer, director and Hero is spreading widely in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X