பாலிவுட்டில் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணி.. அடுத்தடுத்து 6 படங்கள் ரிலீஸ்.. மகிழ்ச்சியில் காயத்ரி

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளை கவர்ந்த ஒரு தொடராகும். இதன் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பலரையும் கவர்ந்திருக்கும் இந்த சீரியலில், ஜான்சி ராணியாக நடித்து பலரின் மனதில் இடம் பிடித்த காயத்ரி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் என நான், நினைத்துக்கூட பார்க்காத ஒன்று என்று பேட்டியில் கூறியுள்ளார்.

அயலி வெப் தொடரில் நடித்த விஜே காயத்ரி, எதிர்நீச்சல் முதல் பாகத்தில், எப்போதும் வெற்றிலை போட்டுக்கொண்டே இருப்பார். வெற்றிலை போட்டு பழக்கம் இல்லாததால், படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டே இருந்ததால், வாய் புண்ணாகிவிட்டது. இதனால், ஷூட்டிங் முடிந்ததும் நேராக மருத்துவரிடம் தான் செல்லுவேன். நான் பட்ட கஷ்டத்திற்கு இப்போது கை மேல் பலன் வந்துள்ளது என்று பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அந்த கதாபாத்திரத்தை அனைவரும் கொண்டாடுகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும், ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. அனைத்து படத்திலுமே எனக்கு நல்ல கதாபாத்திரம் தான். சிலர் அயலியில் நான் நடித்ததை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள், சிலர் ஜான்சி ராணி கதாபாத்திரத்தை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். அயலி வெப் தொடர் எந்த அளவிற்கு எனக்கு ஒரு பெயரை வாங்கி கொடுத்ததோ, அதே போல, எதிர்நீச்சல் சீரியலும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

Ethirneechal Serial Jhansi Rani

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு: இதைவிட மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறேன் அது விரைவில் வெளியாக உள்ளது. நான் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்துக் கொண்டு இருந்த போது தான், எனக்கு பாலிவுட்டில் இருந்து ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. ஒரு ஸ்கிரிப்டை அனுப்பி அதை இந்தி மற்றும் தமிழில் பேசிகாட்ட சொன்னார்கள், நானும் நடித்து காட்டி விட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு பத்து மாதம் அதை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. திடீரென ஒரு நாள், நீங்க செலக்டாகி விட்டீர்கள், புனேவில் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்து லண்டனில் படப்பிடிப்பு என்று சொன்னதும் என்னால், நம்பவே முடியவில்லை. Scam 1992 என்ற ஒரு அட்டகாசமான வெப் தொடரை கொடுத்த இயக்குநர் Harshad Mehta இந்த தொடரை இயக்கி இருக்கிறார். இதில், தமிழ் நாட்டில் இருந்து நான் நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தொடரின் படப்பிடிப்புக்காக நான் லண்டனில் இருந்த போது, மக்கள் அனைவரும், எதிர்நீச்சல் தொடரை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும் அவர்கள் பேசுவதை கேட்டுகும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று காயத்ரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், இத்தனை நாட்களாக வராமல் இருந்த ஜான்சி ராணி தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இந்த முறை வெற்றிலை போடாமல், விபூதியை வாயில் போட்டுக்கொண்டு இருக்கிறார். தற்போது குணசேகரனின் மணிவிழா நின்று விட்டதால், ஜான்சி ராணி மீண்டும் தனது ஆட்டத்தை வீட்டில் ஆரம்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X