நடிகையுடன் கிசுகிசு.. தேவயானியால் கிடைத்த வாழ்க்கை.. எதிர்நீச்சல் திருசெல்வம் யார்?

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இப்போது பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் திருச்செல்வம் ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலின் முதல் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் தொடர்கிறது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பெரியதாக தென்படாமல் இருந்த ஜீவானந்தம், தற்போது தர்ஷன் திருமண பிரச்சனையால் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனால், சீரியல் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இதுவரை 200 வாரங்களை கடந்து சென்றிருக்கும் நிலையில், கடந்து வாரம் மாஸ் காட்டிவிட்டார் திருச்செல்வம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் யார்? அவர் எப்படி சினிமா துறையில் நுழைந்தார்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Ethirneechal Thodarkirathu Devayani thiruselvam
Photo Credit:

எதிர்நீச்சல் இயக்குநர்: திருச்செல்வத்தின் முழு பெயர் திருச்செல்வம் வேலுச்சாமி, இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிறந்தார். இந்த சீரியலின் வசனகர்த்தாவாக மெட்டி ஒலியில் சீரியலில் நடித்த ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். ஸ்ரீவித்யா குறித்து திருச்செல்வம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது, ஸ்ரீவித்யாவை எனக்கு 13 வயதிலிருந்தே தெரியும். அவர் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார். இந்த ப்ராஜெக்ட் மட்டுமல்லாமல், அடுத்து வரும் எந்த ப்ராஜெக்டாக இருந்தாலும், அதில் ஸ்ரீவித்யா நிச்சயம் இருப்பார் என கூறியிருந்தார். இவர் இப்படி பேசியதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா... இல்லை இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா... இல்லை திருமணம் செய்து கொண்டார்களா.. என பலவிதமான சர்ச்சைகள் எழுந்தன.

திருச்செல்வம்: ஆனால், இந்த சர்ச்சைகள் அனைத்தும் உண்மை இல்லை ஏனென்றால், திருச்செல்வம் அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி பாரதி என்கிற மனைவி இருக்கிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தை பிறந்த திருச்செல்வத்திற்கு சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால், சென்னையில் உள்ள திரைப்பட இன்ஸ்டியூட்டில் படித்தார். அப்போது அவர், சவுண்டு இன்ஜினியராக பணியாற்றி உள்ளார். அப்படி பணியாற்றிக் கொண்டே கதைகளையும் அவர் எழுதி வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இளையராஜாவின் குழுவில் சவுண்ட் ரெக்கார்டிங் குழுவில் ஒருவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கோலங்கள்: திரைப்படங்களை இயக்கும் ஆர்வம் இருந்ததால், திருகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திருச்செல்வத்திற்கு மெட்டி ஒலி சீரியலில் நடிப்பும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில், எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், திருமுருகன் இந்த கதாபாத்திரத்தில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியதை அடுத்த மெட்டி ஒலி சீரியலில் நடித்தார். அதன் பின் தான், கோலங்கள் என்ற சீரியலை இயக்கினார் திருச்செல்வம். இந்த சீரியலில் தேவயானி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் சீரியலாக மாறியது.

கோலங்கள் சீரியலில் வரும் டைட்டில் பாடல் ஆரம்பிக்கும் போதே, தொலைக்காட்சி பெட்டி முன் பலரும் ஆஜராகிவிடுவார்கள். மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த், கலைஞர் கருணாநிதிக்கு இந்த சீரியல் மிகவும் பிடித்த சீரியலாகும். கலைஞரே திருச்செல்வத்தை நேரில் அழைத்து பாராட்டியும் உள்ளார். இதே போல, தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை ரஜினிகாந்த் பார்ப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மெட்லி ஒலி சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து காவேரி, பொக்கிஷம், சித்திரம்பேசுதடி, கைராசி குடும்பம், எதிர்நீச்சல் தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறதை இயக்கி அதில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X