For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முத்தம் கூட பாதுகாப்பாக கொடுக்கணும்.. மாஸ்டர் செஃப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி !

  |

  சென்னை : நடிகர் விஜய் சேதுபதி இப்பொழுது பிரம்மாண்டமாக உருவாகி வரும் சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப் தொகுத்து வழங்க உள்ளார்.

  'முத்தம் கூட பாதுகாப்பா கொடுக்கணும்!' | Vijay sethupathi Interview | Oneindia Tamil

  சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை மிக விரைவிலேயே ஒளிபரப்ப உள்ளது.

  மாஸ்டர் செஃப் படப்பிடிப்பு கடந்த நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்கள் அளித்துள்ளார்.

  ரீல் ஹீரோவாய் இருக்காதீங்க.. சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய விஜய்.. ஹைகோர்ட் குட்டு! ரீல் ஹீரோவாய் இருக்காதீங்க.. சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய விஜய்.. ஹைகோர்ட் குட்டு!

  பிரமாண்ட சமையல் நிகழ்ச்சி

  பிரமாண்ட சமையல் நிகழ்ச்சி

  விஜய் சேதுபதி இப்பொழுது தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் உச்ச நடிகராக இருந்த போதும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இயல்பாக ரசிகர்களை அரவணைத்து வரும் இவர் படங்களுக்கு மத்தியிலும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது புதிதாக உருவாகிவரும் மாஸ்டர் செஃப் என்ற பிரமாண்ட சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

  உரிமையாளர் சரவண பிரசாத்

  உரிமையாளர் சரவண பிரசாத்

  சன் டிவியில் மிக விரைவிலேயே இந்த நிகழ்ச்சி பரப்பப்பட உள்ள நிலையில் ஏற்கனவே ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியை பெங்களூருவில் உள்ள இன்னோவாட்டிவ் பிலிம் அகாடமி உரிமையாளர் சரவண பிரசாத் தயாரித்து வருகிறார். இன்னோவாட்டிவ் பிலிம் அகாடமியில் தான் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாஸ்டர் செஃப் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார்.

  எளிய கவிஞர்

  எளிய கவிஞர்

  இது ஒரு சமையல் நிகழ்ச்சி என்பதால் உணவைப் பற்றியும் உணவைப் பற்றி பாரதியார் கூறிய "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாதியார் கூறியிருந்தது பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்டதற்கு.. அது ஒரு மிகப்பெரிய அக்கறையாக பார்க்கிறேன். பாரதியார் உலக மக்களை புரிஞ்சுக்கிற ஒரு எளிய கவிஞர் என நச்சுன்னு பதிலளித்திருந்தார்.

  40-க்கும் மேற்பட்ட நாடுகளில்

  40-க்கும் மேற்பட்ட நாடுகளில்

  மேலும் சமையல் நிகழ்ச்சிகள் பல்வேறு சேனல்களில் விதமான முறைகளில் ஒளிபரப்பப்பட்டு கொண்டுள்ளது குறிப்பாக சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதிலிருந்து நீங்கள் தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி எவ்வாறு வேறுபடுகிறது என கேட்டதற்கு.. அதிலிருந்து மாறுபடுவதற்காக நாங்க வேலை பார்க்கல இந்த நிகழ்ச்சி ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக போய்கிட்டு இருக்க குக்கிங் ஷோ..

  எல்லாருமே ஹோம் குக்ஸ்

  எல்லாருமே ஹோம் குக்ஸ்

  இது ரொம்ப சீரியஸான சோ.. இதுல கலந்துக்குறவங்க யாருமே செலிபிரிட்டி கிடையாது எல்லாருமே ஹோம் குக்ஸ் தான் வீட்ல சமைக்கிறவங்க.. சமையல் கலைய நேசிச்சி பண்றவங்கள தான் இங்கே வெச்சிருக்கோம். மேலும் தயிர் சாதத்திற்கு சைட் டிஸ் வாழைத்தண்டு கூட்டு, முட்டை ஆம்லெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் காம்போ என்ற புதிய தகவலை தெரிவித்திருந்தார் .

  நண்பர் நித்திஷ்

  நண்பர் நித்திஷ்

  கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கும் ரோல் எந்த மாதிரி இருக்கும் என கேட்டதற்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை படத்தில் மிக விரைவிலேயே பார்க்கலாம் என கூறிவிட்டார் . 2021ல் கொடூரமாக தாக்கி இருக்கும் கொரோனாவால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் உங்களை மிகவும் பாதித்த செய்தி எது எனக் கேட்டதற்கு... இயக்குனர் கே வி ஆனந்த், நண்பர் நித்திஷ். நித்திஷ் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வீடியோ கால் மூலம் அவருடன் பேசினேன் "பயப்படாத மாமா எல்லாம் சரியாயிடும்" என கூறி இருந்தேன் ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செய்தி கேட்டு மிகவும் நொறுங்கிப் போனேன். எனக்கு அவன 15, 16 வருடமாக நன்றாகவே தெரியும்.

  சுறுசுறுப்பான மனுஷன்

  சுறுசுறுப்பான மனுஷன்

  இயக்குனர் கேவி ஆனந்த் சார் ரொம்ப சுறுசுறுப்பான மனுஷன்.. அவருக்கு இப்படி ஏற்பட்டிருப்பது என்னால் சுத்தமாகவே நம்பமுடியவில்லை. எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் அதை அசால்டா ஹான்டில் பண்ணக் கூடியவர். ரொம்ப பாஸ்டா இருப்பாரு. மேலும் இயக்குனர் ஜனநாதன் பற்றி கேட்டதற்கு என்னுடைய அலுவலகத்தில் இரண்டே இரண்டு போட்டோக்கள் மட்டும்தான் பெரிய சைஸில் இருக்கும் அதில் ஒன்னு எங்க அப்பாவுக்கு இன்னொன்னு ஜனநாதன் சாருக்கு.

  எனக்கு இது பேரிழப்பு

  எனக்கு இது பேரிழப்பு

  எஸ். பி ஜனநாதன் சார் எனக்கு ஆசான், நண்பர், குரு எனக்கு எல்லாமுமாக இருந்தவர். சாலி கிராமத்தில் டப்பிங் சென்றிருந்தேன். சார் சாப்பிடும் போது கீழே விழுந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். சரியாகிடும் என நெனச்சேன். போகப்போக சீரியஸாகிட்டே போச்சு அடுத்த நாள் என்னால ஷூட்டிங்கில் நடிக்க முடியல. அது எனக்கு ஒரு பேரிழப்பு.. உண்மையான சித்தாந்தத்த பேசக் கூடிய எளிய வகையில் புரிய வைக்கக் கூடியவர். மக்களுக்கு புரியக் கூடிய வகையில் எடுக்கக் கூடிய சிறந்த இயக்குனர்.

  தங்கமான மனுஷன்

  தங்கமான மனுஷன்

  புறம்போக்கு படத்தை முடித்த உடனேயே அடுத்த படத்தை சீக்கிரம் பண்ணுங்க சார் உங்க அறிவு மக்களுக்கு போய் சேரனும்னு கெஞ்சிக்கிட்டே இருப்பேன். வெள்ள பேப்பர்ல கூட கையெழுத்து போட்டு தரேன் சீக்கிரம் ஆரம்பிங்க சார் என்றும் கேட்டிருந்தேன். உடன் இருந்தவர்களுக்கு தெரியும் நான் கேட்டது . எனக்கு இது பேரிழப்பு தமிழ் சினிமாவுக்கும் சென்றடைய வேண்டிய மக்களுக்கும் இது ஒரு இழப்பு. அவர் மறஞ்சதுக்கு அப்புறம் தான் அவருடைய வீடியோஸ் பார்த்து அவரைப் பற்றி எல்லாருக்கும் தெரிய வந்திருக்கு எவ்வளவு தங்கமான மனுஷன் இவ்வளவு சிறந்த அறிவாளி என உருக்கமாக கண் கலங்கியவாறு பேசியிருந்தார். இது கொரோனா காலகட்டம் என்பதால் முத்தம் கூட பாதுகாப்பாக தான் கொடுக்க வேண்டும் என ஜாலியாக போற போக்கில் ஒரு செய்தியையும் கூறியிருந்தார்.

  English summary
  Actor Vijay Sethupathi has said that we should be careful while kissing.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X