twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த படம் பார்த்த பிறகு எல்லாரும் பனாரஸ்க்கு போவாங்க.. பனாரஸ் பட ஹீரோ சையத் கான் சுவாரஸ்யம்!

    |

    சென்னை: நடிகர் சையத் கான், நடிகை சோனல் ஆகியோர் நடிப்பில் பெல்பாட்டம் படத்தை இயக்கிய ஜெயதீர்த்தா இயக்கியுள்ள படம் பனாரஸ்.

    கன்னடமொழியில் உருவான இப்படமானது பான் இந்தியா படமாக நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது. இந்துக்களின் புனித தலமான காசியை மையமாக வைத்து அழகான காதல்படமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஜெயதீர்த்தா, அறிமுக நடிகர் சையத் கான் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி

    என் குழந்தைக்கு என்னோட DNA இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. சன்னி லியோன் பளிச் பேட்டி! என் குழந்தைக்கு என்னோட DNA இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. சன்னி லியோன் பளிச் பேட்டி!

    என்னுடைய முதல் படம்

    என்னுடைய முதல் படம்

    கேள்வி: சையத், பனாரஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இந்த படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பனாரஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர், முதல் தலைமுறை நடிகர் என்று யோசிக்காமல் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை தயாரித்துள்ளார். அவருடைய நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி நானும் என்னுடைய முழு உழைப்பையும் இப்படத்திற்கு கொடுத்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த படத்தின் கான்செப்ட் எனக்கு புரியவில்லை. நான் முழுவதுமாக இயக்குநரை நம்பினேன். அவர் என்ன சொன்னாரோ அதை நான் செய்திருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது.

    இந்தியாவில் சக்தி ஸ்தலம்

    இந்தியாவில் சக்தி ஸ்தலம்

    கேள்வி: ஜெயதீர்த்தா, பனாரஸ் படத்தின் மையக்கருத்து என்ன?

    பதில்: பனாரஸ் திரைப்படம் ஒரு சாதாரண காதல் படம் இல்லை. இது ஒருவித ட்ராவல் ஸ்டோரி. பனாரஸ் என்பது இந்தியாவில் சக்தி ஸ்தலம் அமைந்துள்ள ஒரு இடம். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பாசிடிவ் உணர்வை உணர்ந்தார்கள். ரசிகர்களும் இதை உணர்வார்கள். உணர்வை எந்த விதமான ஸ்கிரிப்ட்லையும் எழுத முடியும். ஆனால் கண்டிப்பாக உணர முடியும். ஒரு பாடல் காட்சியில மட்டும் தான் கதாநாயகன், கதாநாயகிக்கு இடையே கொஞ்சம் நெருக்கமான காட்சிகள் இருக்கும். மற்றபடி இடைவேளையின் போதுதான் கதாநாயகன், கதாநாயகி ஆகியோர் தங்களுக்குள் காதல் மலர்ந்ததை உணர்வார்கள். அது வரை இருவரும் சந்திப்பார்கள், பேசுவார்கள், சண்டையும் போடுவார்கள் என்றார்.

    நான் படித்தது ஹிந்து பள்ளியில்

    நான் படித்தது ஹிந்து பள்ளியில்

    கேள்வி: சையத், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் என்று எதை குறிப்பிடுவீர்கள்?

    பதில்: நான் இஸ்லாம் மதத்தை சார்ந்திருந்தாலும், இந்த படத்தில் நடிப்பதில் எந்த வித சிரமமும் எனக்கு தெரியவில்லை. நான் படித்தது ஒரு ஹிந்து பள்ளி. அது மட்டுமின்றி அந்த பள்ளியில் நான் மட்டும் தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன். அங்கு நண்பர்களுடன் இணைந்து விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம். விநாயகர் சிலைக்கு பெயிண்ட் அடித்து, அலங்காரம் செய்வது என அனைத்து வேலைகளையும் நானே செய்வேன். எனக்கு வாழ்க்கையில் இது தான் மகிழ்ச்சியான தருணம்.

    காமம் கிடையாது

    காமம் கிடையாது

    கேள்வி: சையத், உங்களுடைய முதல் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்தது குறித்து...

    பதில்: இந்தப் படத்தில நெருக்கமான காட்சிகள் என்பது ஒரே ஒரு பாடல் காட்சியில மட்டும் இருக்கும். அந்தப் பாடல்காட்சியும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடல் காட்சியில் வருகிற நெருக்கமான காட்சிகள் கூட காமம் சார்ந்த காட்சிகளாக இருக்காது. இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு இடையே இருக்கின்ற காதல் பக்குவமானது. இந்தப் படத்தை கண்டிப்பாக குடும்பத்தோட பார்க்கலாம்.

    நடிகை சௌந்தர்யா புகைப்படம்

    நடிகை சௌந்தர்யா புகைப்படம்

    கேள்வி: சையத், நடிகை சௌந்தர்யா குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இந்தப் படத்தில எனக்கு அம்மாவாக நடிகை சௌந்தர்யா அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கிறோம். ஒரு காட்சியில், நான் அவர்கள் போட்டோ முன்பு நின்று அழ வேண்டும். கிளிசரின் ஏதுமின்றி நான் அழுதேன். ஏனென்றால் நடிகை சௌந்தர்யா நிறைய விதங்களில் என் அம்மா மாதிரியே இருந்தார்கள். இந்தப் படம் பார்க்கும்போது ரசிகர்கள், என்னை அவர்களின் மகனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ, ப்ரண்டாகவோ இப்படி ஏதோ உறவு முறை வைத்து தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    பனாரஸ் குறித்து நிறைய தகவல்கள்

    கேள்வி: ஜெயதீர்த்தா, பனாரஸ் திரைப்படத்தை பார்ப்பதற்கு நீங்கள் கூறும் காரணம்?

    பதில்: முக்தி பவன் குறித்து கதாநாயகியிடம், கதாநாயகன் பேசும் வசனத்தில், பனாரஸ் வந்து எல்லாரும் எல்லாவற்றையும் இழந்து, அப்புறம் மோட்சத்தை அடைவார்கள். ஆனால் நான் பனாரஸ் வந்து முக்தியை அடைந்த பின், வாழப்போகிறேன் என்று கூறுவார். அந்தளவுக்கு இந்தப் படத்தில் பனாரஸ் குறித்து நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கோம். கண்டிப்பாக இந்தப் படம் பார்த்த பிறகு ஒவ்வொருத்தரும் தங்கள் குடும்பத்தை பனாரஸ்க்கு மாற்றி விடலாமா என்று யோசிப்பார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், இது என்னுடைய ஏழாவது படம். என்னுடைய பெல் பாட்டம் திரைப்படம் திரில்லர் கலந்த காமெடி படம். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பனாரஸ் படத்தில ரொம்பவும் குறைவான கதாபாத்திரங்கள் மட்டும் வருவார்கள். ஆனால் ஒவ்வொருவரின் கேரக்டரும் ரொம்பவும் முக்கியமானதாக இருக்கும். பெல்பாட்டம் படத்தில் நடித்த அச்யுத் குமார், இப்படத்தில் நாராயண சாஸ்திரி கேரக்டரிலும், சம்பு கேரக்டரில் சுஜய் சாஸ்திரியும் நடித்துள்ளனர் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/RFCV2cgzkD0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Banaras is a film directed by Jayathirtha who directed Bellbottom and starring actor Syed Khan and actress Sonal. Made in Kannada, the film will release on November 4 as a Pan India film. The screenplay of the film is set as a beautiful romantic film centered around Kaashi, a holy place of Hindus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X