ஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்!
சென்னை: மெட்ராஸ் படத்தில் தொடங்கி கபாலி, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை என பல படங்களில் துணை நடிகராக நடித்து கலக்கி வருகிறார் நடிகர் கலையரசன்.
சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மகனாக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.
ஓ மை கடவுளே ஹீரோ அசோக் செல்வனும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரையும் ஒரே இடத்தில் மடக்கி பிடித்து எடுத்த செம சுவாரஸ்யமான கலாட்டா பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

கலக்கும் கலையரசன்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்தியின் நண்பராக நடித்து அசத்தி இருப்பார் கலையரசன். யாருடா இந்தப் பையன் இப்படி நடிக்கிறானே என பலரும் பாராட்டித் தள்ளினர். தொடர்ந்து துணை நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

வாத்தியார் மகன்
வாத்தியார் மகன் மக்கு என்பதை மறைமுகமாக சொல்வது போல சார்பட்டா பரம்பரை படத்தில் வெற்றி எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்திருப்பார் நடிகர் கலையரசன். அப்பாவுக்கு அடுத்து நாம தான் நம்ம சார்பட்டா பரம்பரையை காப்பாத்தணும் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கபிலன் ஆர்யா புகுந்து இவரது இடத்தை பறித்து விட்டார் என கோபம் கொள்ளும் இடங்களில் எல்லாம் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி இருக்கிறார்.

ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயிக்கணும்
நடிகர் கலையரசன் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான அசோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து அளித்த பேட்டியில் தான் ஒரு விளையாட்டு வீரர் என்றும் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்காக தங்கம் ஜெயிக்கணும் என்றெல்லாம் தான் கனவு கண்டதாகவும், அப்படி ஒரு கதையை கூட எழுதி வைத்திருப்பதாக ஏகப்பட்ட சுவாரஸ்ய அப்டேட்களை அவிழ்த்து விட்டுள்ளார்.

சஞ்சனாவுக்கு முத்தம்
சார்பட்டா பரம்பரையில் நண்பன் கலையரசனின் நடிப்பை கண்டு தான் வியந்தேன் என்றும் கலையரசன் சிறந்த நடிகன் என்றும் நடிகர் அசோக் செல்வன் மனதார புகழ்ந்துள்ளார். மேலும், சஞ்சனா நடராஜனுக்கு முத்தம் கொடுத்த காட்சிகள் குறித்து கேட்டபோது நண்பனை நல்லாவே வச்சு செய்தார் அசோக் செல்வன்.
மூணு ஹீரோயின் வேணுமா
பதிலுக்கு கலையரசனும் சும்மா விடல.. எனக்கெல்லாம் எப்பவோ ஒரு முறை தான் இப்படி ஒரு சீன் வருது.. அசோக் எல்லாம் ஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் நடிப்பேன்னு ஒத்தக் காலில் நிக்கிறான்னு செம பங்கமாக கலாய்த்த பேட்டி வீடியோவை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











