அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை காதலிச்சாங்களே ஞாபகமிருக்கா? தேன் பட நாயகி அபர்ணதி எக்ஸ்க்ளூசிவ்!

சென்னை: கலர்ஸ் தமிழில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யாவை காதலித்த அபர்ணதி நடிப்பில் உருவாகி உள்ள தேன் திரைப்படம் நாளை ரிலீசாகிறது.

Recommended Video

தேன் மாதிரி நிறைய படம் பண்ணனும் | ACTRESS ABARNATHI CHAT | FILMIBEAT TAMIL

ஏகப்பட்ட விருது விழாக்களில் திரையிடப்பட்டு 35க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ள இந்த படத்தில் நாயகியாக அபர்ணதி நடித்துள்ளார்.

தேன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்த படம் பற்றியும், நடிகர் ஆர்யா குறித்தும் அவர் பேசியுள்ள பிரத்யேகமான பேட்டி வெளியாகி உள்ளது.

எங்க வீட்டு மாப்பிள்ளை

எங்க வீட்டு மாப்பிள்ளை

கடந்த 2018ம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவை ஏகப்பட்ட பெண்கள் காதலிக்க முயன்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டில் முடிய மிகப்பெரிய பரபரப்பு கிளம்பியது. தற்போது நாயகியாக அபர்ணதி சில படங்களில் நடித்து வருகிறார்.

மறந்தே போயிட்டேன்

மறந்தே போயிட்டேன்

நடிகர் ஆர்யா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அபர்ணதியை திருமணம் செய்து கொள்ளவில்லை. அது ஒரு ரியாலிட்டி ஷோ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இரண்டாம் ஆண்டு திருமண நாளை ஆர்யா கொண்டாடிய நிலையில், மார்ச் 10 நியாபகம் இருக்கா? என அபர்ணதியிடம் கேட்க, அந்த தேதியே மறந்து போயிட்டேன் என்கிறார்.

ஜிவி பிரகாஷ் படத்தில்

ஜிவி பிரகாஷ் படத்தில்

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபர்ணதிக்கு கிடைத்தது. அதன் பிறகு தேன் உள்ளிட்ட சில படங்களிலும் அபர்ணதி நடித்துள்ளார். ஜெயில் திரைப்படம் இன்னமும் திரைக்கு வராத சூழலில் அபர்ணதி நடிப்பில் ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ள தேன் திரைப்படம் நாளை ரிலீசாகிறது.

விருதுகளை குவித்த தேன்

விருதுகளை குவித்த தேன்

மலை வாழ் மக்களின் வாழ்க்கையில் கார்ப்பரேட்காரர்கள் செய்யும் வியாபார அரசியலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இயக்குநர் கணேஷ் விநாயகன் வலிமையான அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் வசனங்களை இந்த படத்தில் மிகவும் துணிச்சலுடன் சரியான இடங்களில் வைத்து பாராட்டுக்களை அள்ளியுள்ளார். கோவா, புனே என ஏகப்பட்ட சினிமா விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வருகிறது தேன்.

அம்மாவாக நடிக்க பயந்தேன்

அம்மாவாக நடிக்க பயந்தேன்

பூங்கொடி எனும் மலைவாழ் பெண்ணாக இந்த படத்தில் அபர்ணதி நடித்துள்ளார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆரம்பத்தில் அம்மா கதாபாத்திரம் என்றதும் சற்றே பயந்தேன் என்றும் ஆனால், இயக்குநர் சொன்ன கதை ரொம்பவே பிடித்துப் போக, இந்த படத்தில் நடித்தால், நிச்சயம் மன திருப்தி இருக்கும் என்றே சம்மதித்தேன் என சிறு புன்னகையுடன் அடக்க ஒடுக்கமாக இதற்கு முன் காணாத அபர்ணதியை காட்டி உள்ளார்.

நாளை ரிலீஸ்

அருவியில் இருந்து வரும் தண்ணீரில் கார்ப்பரேட் கம்பெனிகள் செய்யும் வியாபார அரசியல் காரணமாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலியை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. நாளை திரையரங்குகளில் குறிஞ்சி மலையின் அழகை கண் முன்னே விரிக்க இந்த தேன் காத்துக் கொண்டிருக்கிறது. படத்தையும் மிஸ் பண்ணாதீங்க, அபர்ணதியின் இந்த பேட்டியையும் மிஸ் பண்ணாதீங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X