பாலா சார் கிட்ட நான் திட்டே வாங்கல.. அந்தகாரம் ஹீரோ வினோத் கிஷன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னை: நந்தா படத்தில் சிறுவனாக நடித்து, தனது கண்களாலே மிரட்டிய வினோத் கிஷன், தற்போது அந்தகாரம் படத்தில் பார்வையற்றவராக நடித்து மிரட்ட உள்ளார்.

Recommended Video

நந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL

நெட்பிளிக்ஸில் வரும் நவம்பர் 24ம் தேதி ரிலீசாகவுள்ள படம் அந்தகாரம். இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.

கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நந்தாவில் அறிமுகம்

நந்தாவில் அறிமுகம்

அந்தகாரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் உள்ளிட்டோரின் பாராட்டுக்களை அள்ளியது. பாலாவின் நந்தா படத்தில் சிறு வயது சூர்யாவாக அறிமுகமானார் வினோத் கிஷன். அந்த படத்திலேயே வேற லெவலில் நடித்து மிரட்டி இருந்தார்.

திட்டு வாங்கல

திட்டு வாங்கல

முதல் சீனெல்லாம் தனக்கு நடிக்கவே வரவில்லை என்றும் ஏகப்பட்ட டேக்குகள் வாங்கினேன் என்றும் இந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால், சிறுவன் என்பதால், பாலா சார் கிட்ட நான் மட்டும் எந்தவொரு திட்டும் வாங்காம தப்பிச்சிட்டேன். அந்த படத்தின் கோயில் சீன் எல்லாம் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது என்றார்.

அந்த இரண்டு படம் தான்

அந்த இரண்டு படம் தான்

இசையிலும் நடிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ள வினோத் கிஷன், நடிகர் கார்த்தி உடன் நான் மகான் அல்ல படத்தில் இளம் வயது வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். எங்கே போனாலும், இன்னமும் தன்னை நந்தா மற்றும் நான் மகான் அல்ல படங்களை வைத்துத் தான் நினைவு கூர்கின்றனர். அந்த அளவுக்கு அந்த இரு படங்களின் கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்றார்.

கிரிக்கெட்லாம் ஆடுறாங்க

கிரிக்கெட்லாம் ஆடுறாங்க

மேலும், அந்தகாரம் படத்தில் பார்வை குறைபாடு உள்ள நபராக நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். பார்வை குறைபாடு என்பது நமக்குத் தான் தெரியும் என்றும், அவர்களுக்கு அது ஒரு குறையாகவே தெரியவில்லை. சென்னையில் உள்ள ஒரு கண் பார்வையற்றவர்கள் விடுதியில் தங்கி அவர்களுடன் பழகினேன். செம ஜாலியா கிரிக்கெட் எல்லாம் விளையாடுகிறார்கள்.

டிஸ்டர்ப் பண்ணாதீங்க

எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், ஜாலியா போயிட்டு வராங்க, சினிமாவில் பார்ப்பது போல அவர்களுக்கு எல்லாம் ரோடு கிராஸ் எல்லாம் பண்ணி விட தேவையே இல்லை. அவர்களே சரியாக கணித்து போயிட்டு வருகின்றனர். அவங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் இருந்தாலே போதும் என பேசியுள்ள பேட்டியை கண்டு ஏகப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X