Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி!

Recommended Video

சின்ன பையன் முன்னாடி ரொமான்ஸ் பண்ணோம் | Exclusive interview with actress Anjali

சென்னை: சிந்துபாத் படம் தன் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இறைவி படத்தைத் தொடர்ந்து சிந்துபாத் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகி இருக்கிறார் அஞ்சலி. இப்படத்தில் மேக்கப்பே இல்லாமல் வெகு இயல்பாக நடித்துள்ளார். டிரெய்லரே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் சிந்துபாத் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பேசினார் அஞ்சலி. அப்பேட்டியில் அவர் கூறியதாவது,

வெண்பா ஸ்பெஷல்:

வெண்பா ஸ்பெஷல்:

சிந்துபாத் படத்தில் என்னுடைய வெண்பா கேரக்டர் ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கும். நாம நிறைய படம் பண்ணுவோம். ஒரு சில படங்கள் நமக்கும் ஸ்பெஷலா அமைஞ்சிடும். அப்படி ஒரு படம் தான் சிந்துபாத். இந்த படத்துல நான் சத்தமா பேசுவேன். விஜய் சேதுபதிக்கு கத்தி பேசுனாதான் காது கேட்கும். இதனால எங்க ரெண்டு பேர் கெமிஸ்ட்ரியும் சூப்பரா இருக்கும்.

கலகலப்பு சீன்:

கலகலப்பு சீன்:

நான் எப்போதுமே சத்தமா தான் பேசுவேன். கலகலப்பு படத்துல என்ன டெய்லி பார்த்து பார்த்து தான் முடிய பிடிச்சு இழுக்கிற சீனையே சுந்தர்.சி வெச்சார். உண்மையில் ஸ்கிரிப்ட்ல அந்த சீன் இல்லவே இல்ல. என்னோட இயல்பே கத்தி பேசுறது தான்.

கிளைமாக்ஸ்:

கிளைமாக்ஸ்:

விஜய் சேதுபதி ஒரு சூப்பரான நடிகர். அவரோட நடிக்கும் போது எப்பவுமே கான்சியசா இருப்பேன். சின்ன சின்ன விஷயங்களைக் கூட க்யூட்டா பண்ணி விஜய் பேர் வாங்கிட்டு போய்டுவார். அதனால அவரோடு நடிக்கும் போது கஷ்டமாத் தான் இருந்துச்சு. க்ளைமாக்ஸ் சீன்ல இரண்டு பேருமே போட்டி போட்டு நடிச்சிருப்போம். அந்த சீன் சூப்பரா வந்திருக்கு.

சூர்யா நடிப்பு:

சூர்யா நடிப்பு:

சிந்துபாத் படத்துல விஜய்க்கும் எனக்கும் ரசிக்கும்படியான சீன்ஸ் நிறைய இருக்கும். ஆனா படத்துல எங்கக் கூடவே விஜய் சேதுபதி பையன் சூர்யா நடிச்சிருக்கான். ரொமான்ஸ் சீன்ல நடிக்கும் போது, அப்போ தெரியவில்லை. இப்போ யோசிச்சு பார்க்கும் போது தான், சின்ன பையன பக்கத்துல வெச்சுகிட்டு ரொமான்ஸ் பண்ணினது தெரியுது.

பாராட்டு:

பாராட்டு:

சூர்யா தான் இந்த படத்தோட ராக் ஸ்டார். முதல் படம் நடிக்கிற மாதிரியே இருக்காது. ரொம்ப கேஷுவலா நடிச்சிருக்கான். கேமரா பயம் கிடையாது, எல்லாத்தையுமே ரொம்ப மாஸா, ஸ்டைலா பண்ணிருக்கான். டிரெய்லர் பார்த்துட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டினேன்.

மேக்கப் டெஸ்ட்:

மேக்கப் டெஸ்ட்:

இந்த படத்துல எனக்கு மேக்கப் கிடையாது. மேக்கப் கூடவே கூடாதுன்னு கேமராமேன் ஸ்டிரிக்டா சொல்லிட்டார். ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் மேக்கப் போட்டிருக்கேனான்னு செக் பண்ணிட்டு தான் உள்ள அனுப்புவாங்க.

லிசா தோல்வி:

லிசா தோல்வி:

லிசா படம் சரியாக போகவில்லை என்பது வருத்தம் தான். ஆனால் தெலுங்கில் நன்றாக ஓடியிருக்கு. ஆடியன்ஸ் கிட்ட சரியா கொண்டு போய் சேர்க்காதது கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா அதற்காக கவலைபட்டுகிட்டே இருக்க முடியாது.

செங்கொடி:

செங்கொடி:

நாடோடி 2 படத்துல செங்கொடி எனும் ரோலில் நடிக்கிறேன். அந்த படம் ரிலீசுக்கு தயாரா இருக்கு. மாதவன், அனுக்‌ஷாகூட ஒரு படம் நடிக்கிறேன். அதுல அமெரிக்க போலீஸ் அதிகாரியா நடிக்கிறேன். சொன்னா புரியாது பட இயக்குனரோட அடுத்தப் படத்துல நடிக்கிறேன். எல்லாமே சரியா போய்ட்டு இருக்கு", என அஞ்சலி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X