Exclusive: கல்கி படத்துல வெறும் வாய்ஸ் மட்டும் தானா?.. கிருஷ்ணரே நீங்க தானா?.. அர்ஜுன் தாஸ் பதில்!

சென்னை: அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள 'கான் சிட்டி' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரைலர் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வேகமாக டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், அர்ஜுன் தாஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினேன். அதற்கு அவர், அளித்த பதில்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

நடிகர் ரகுவரனை போல வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரரான அர்ஜுன் தாஸ் கைதி படத்திலேயே "லைஃப் டைம் செட்டில்மெண்ட்" எனும் வசனத்தின் மூலம் பிரபலமானார்.

Exclusive Arjun Das answered for did he portray Kalki role in Kalki 2

இயக்குநர் நாக் அஸ்வின் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் அர்ஜுன் தாஸை முகத்தைக் காட்டாமல் காட்டப்பட்ட கிருஷ்ண பகவானுக்கு குரல் கொடுக்க வைத்திருந்தார். அர்ஜுன் தாஸின் குரல் பக்காவாக அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி போக படமும் 1000 கோடி வசூலை ஈட்டியது.

கல்கி 2ம் பாகத்தில் கல்கியே நீங்க தானா?: நாக் அஸ்வின் இயக்கத்தில் புராணக் கதையையும் புனைவுக் கதையையும் கலந்துக் கட்டி உருவாக்கப்பட்ட கல்கி 2898 ஏடி ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. கர்ணனாக அந்த படத்தில் பிரபாஸை காட்டியிருப்பார் நாக் அஸ்வின். ஆனால், தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கல்கி எப்படி இருப்பார்? எந்த நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எந்தவொரு தகவலும் இல்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுமதி கதாபாத்திரத்தில் 2வது பாகத்தில் தீபிகா படுகோனே இல்லை என்பது தான். சாய் பல்லவி, ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போர்ஷன்கள் ஒரு பக்கம் படமாக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இந்நிலையில், கல்கி படத்தில் கிருஷ்ண பகவானுக்கு குரல் கொடுத்த நீங்க, அந்த கிருஷ்ணராகவே நடிக்க வாய்ப்பிருக்கா? என்கிற கேள்வியை அர்ஜுன் தாஸிடம் எழுப்பினேன்.

அவரும் சிரித்துக் கொண்டே, நாக் அஸ்வின் சார் மனசு வச்சு கூப்பிட்டா? கண்டிப்பா பண்ணிடலாம் என்றுக் கூறினார். கல்கி 2ம் பாகத்தின் இறுதியில் கண்டிப்பாக கல்கியாக யார் நடிக்கப் போகிறார் என்பது ரிவீல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exclusive Arjun Das answered for did he portray Kalki role in Kalki 2
Photo Credit:

கான் சிட்டி கல்லா கட்டுமா?: தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்களை சரியான கன்டென்ட் குபீரென சிரிக்க வைக்கும் படங்கள் கல்லா கட்டி வருவதை கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம். இந்நிலையில், வரும் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ள கான் சிட்டி திரைப்படம் அந்த வரிசையில் இடம்பெறுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். டிரைலரை பொறுத்தவரையில் படம் ஃபன் சிட்டியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X