Life is very short nanba, Always be happy..பிக் பாஸ் ஷிவானி ஓபன் டாக்
சென்னை: சின்ன திரையில் நடிக்க தொடங்கி தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக ரசிகர்களை சேர்த்தவர் ஷிவானி நாராயணன்.
பின்பு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்தார்.
சமீபத்தில் பேட்மிண்டன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷிவானி, க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

செய்தி தொகுப்பு
பிக் பாஸ்-க்கு பிறகு தங்களை பற்றி ஊடகங்கள் பல செய்தி தொகுப்புகளை எழுதுகின்றனர் அதெல்லாம் எப்படி எடுத்துக்குறீங்க என்ற கேள்விக்கு, மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும், Life is very short nanba, Always be happy என ஹாப்பியாக இருந்து கொண்டு இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

பள்ளி பருவத்தில்
நிறைய பிரபலங்கள் விளையாட்டு சார்ந்த விஷயங்களை ஆதரிக்கின்றனர். உங்களுடைய பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு என்ன என்ற கேள்விக்கு, பேட்மிண்டன் எனவும், பள்ளி பருவ காலத்தில் அவ்வப்போது கபடி விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார் ஷிவானி.

தளபதி விஜய்
விளையாட்டு சார்ந்த படங்களில் யார் தங்களுக்கு பிடித்தவர் என்ற கேள்விக்கு தளபதி விஜய் என பதிலளித்தார் ஷிவானி. மேலும் விளையாட்டு சார்ந்த படங்களில் இறுதி சுற்று, வெண்ணிலா கபடி குழு, பிகில் ஆகியவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் பேட்டியளித்தார்.

கூடிய விரைவில்
பிக் பாஸ்-ல் இருந்து வந்த பிறகு தங்களை படத்தில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அது குறித்து பேசிய ஷிவானி நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது, கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனவும், இப்போது அதை பற்றி பேச வேண்டாம் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











