ஆணகட்டி பாடல் தான் என்னை படத்திற்குள் கொண்டு சென்றது… இசையமைப்பாளர் ரியாஸ் பேட்டி!

சென்னை: கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் அன்பிற்கினியாள்.

இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் அவரின் மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் கோகுல் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் & நடிகர் பிரவீன் ராஜா க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளனர்.

த்ரில்லான படக்குழு

த்ரில்லான படக்குழு

அன்பிற்கினியாள் படக்குழு திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிக்க கமலா சினிமாஸ் திரையரங்கத்திற்கு சென்றுள்ளது. அங்கு கிடைத்த வரவேற்ப்பை கண்டு படக்குழு த்ரில் ஆனது. அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.

படத்தின் இறுதி காட்சி

படத்தின் இறுதி காட்சி

இந்த படத்திற்காக உங்களுக்கு வந்த மறக்கமுடியாத கமெண்ட் என்ன என்ற கேள்விக்கு, படத்தின் இறுதி காட்சியின் போது படத்தின் நாயகி அனைத்தும் முடிந்தது என உணரும் தருணத்தில் வரும் இசை குறித்து வந்த கமெண்டை மறக்க முடியாத கமெண்டாக குறிப்பிட்டு பதிலளித்தார் ரியாஸ்.

காதலனாக பிரவீண்

காதலனாக பிரவீண்

இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் காதலனாக நடித்துள்ள பிரவீண், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்தது மிகவும் சந்தோஷம் எனவும், டைனமிக் உள்ள கதாபாத்திரம் எனவும், இந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர் கோகுலுக்கு நன்றியும் கூறியுள்ளார் பிரவீண் ராஜா.

ஆணகட்டி பாடல்

ஆணகட்டி பாடல்

இந்த படத்தில் பிடித்த பாடல் ஆணகட்டி பாடல் எனவும், அது தான் தன்னை இந்த படத்திற்குள் கொண்டு சென்றது என கூறியுள்ளார் ரியாஸ். இந்த படத்திற்கு அப்பாற்பட்டு இயக்குனர் கோகுல், அவரின் மகள் ஆகியோரை தனக்கு பிடித்த அப்பா - மகள் எனவும், படப்பிடிப்பின் போது இயக்குனர் தன் மகளோடு பாசமாக கொஞ்சி வீடியோ கால் பேசுவது குறித்தும் சுட்டிகாட்டியுள்ளார் ரியாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X