தெரியாத பலரும் என்னை அழைத்து பாராட்டினர்…. இயக்குனர் கோகுல் பிரத்யேக பேட்டி!
சென்னை : இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் அன்பிற்கினியாள்.
இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் அவரின் மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தை தயாரித்த அனுபவம் குறித்து இயக்குனர் கோகுல் & நடிகை கீர்த்தி பாண்டியன் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளனர்.

நேர்த்தியான இயக்கம்
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார். மலையாள படமான ஹெலன் படத்தை ஒப்பிடுகையில் பெரிதும் குறை இல்லாமல் ஈடு கொடுத்து நேர்த்தியாக படத்தை இயக்கியுள்ளார் கோகுல்.

இயக்குனர் நெகிழ்ச்சி
அன்பிற்கினியாள் படத்தை குறித்து பேசிய இயக்குனர் கோகுல், படம் வெளியான பின்னர் என்னை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் போனில் அழைத்து பாராட்டினர் எனவும், குறிப்பாக மகள்களை பெற்ற அப்பாக்கள் பாராட்டினர் எனவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

சிக்கன் ஹப் கடைகள்
இந்த படத்தின் கதாபாத்திரத்தின் சாயலுக்காக சிக்கன் ஹப் போன்ற பாஃஸ்ட் ஃபுட் கடைகளுக்கு சென்று, அங்கு உள்ளவர்களின் பேச்சு, நடத்தை போன்றவற்றை கண்காணித்து, பின்னர் அன்பிற்கினியாள் படத்தில் நடிக்க தன்னை தயாரிக்கி கொண்டேன் என படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.

படக்குழுவின் ஒத்துழைப்பு
தொடர்ந்து பேசிய இயக்குனரும் நாயகியும் படக்குழுவின் ஒத்துழைப்பை பாராட்டி பேசினர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியை இருவரும் பாராட்டினர். இன்னும் பல அனுபவங்களை நாயகியும், இயக்குனரும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











