வடிவேலுவையும் கோவை சரளாவையும் பிரிச்சிடுங்கன்னு குடும்பமே கேட்டுச்சு.. வி. சேகர் பேட்டி!
சென்னை: இயக்குநர் வி. சேகர் படங்களுக்கு என்றே தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாலசந்தர், விசுவை போல குறைந்த பட்ஜெட்டில் நல்ல குடும்ப கதைகளையும் சமூக அக்கறை உள்ள படங்களையும் பொண்டாட்டியை மதிக்க வேண்டும், பெண்களை போற்ற வேண்டும் என்கிற மையக்கருவை காமெடி கலந்து தனது திரைப்படங்களில் கொடுத்து வந்தவர் தான் வி. சேகர்.
ஆரம்பத்தில், கவுண்டமணி - சரளா என ஜோடி பொருத்தம் இருந்தது. அதன் பின்னர், செந்தில் - சரளா என மாறியது. கடைசியாக வடிவேலு - சரளா என ஜோடி பொருத்தம் உருவாக காரணமாக இருந்ததே நம்ம வி. சேகர் தான்.

முதலில் வடிவேலுவுடன் நடிக்கவே மாட்டேன் என கோவை சரளா சொன்னதாகவும், அவரை கன்வின்ஸ் செய்து நான் தான் நடிக்க வைத்தேன். அதன் பின்னர், அவர்களுடைய ஜோடி பொருத்தம் பிரிக்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது என வி. சேகர் பேட்டியளித்துள்ளார்.
வி. சேகர் படங்கள்: பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக 1987ம் ஆண்டு வெளியான எங்க சின்ன ராசா படத்தில் பணியாற்றிய வி. சேகர் 1990ம் ஆண்டு தனது இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி மற்றும் செந்தில் அந்த படத்தில் நடித்திருந்தனர். அதன் பின்னர், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, விரலுக்கு ஏத்த வீக்கம், எல்லாமே என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஏகப்பட்ட மக்களை கவர்ந்தார்.
கவுண்டமணி வேறலெவல்: முதல் படத்தில் இருந்தே கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் வேலை பார்த்த அனுபவம் ரொம்பவே இனிமையாக இருந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் அவர் குறைவான சம்பளத்தையே வாங்குவார். சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க கவுண்டமணி, செந்தில் 40 லட்சம் 30 நாள் கால்ஷீட்டுக்கு கேட்டாங்க. அதே நேரம் என்னோட படத்தில் 40 நாள் கால்ஷீட் கொடுத்து வெறும் 10 லட்சம் மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்தார்கள் என கவுண்டமணி மற்றும் செந்தில் குறித்த சூப்பரான மேட்டரை ஷேர் செய்துள்ளார்.

கமல் ஜோடியா நடிக்கிறேன்: என்னோட படங்களில் கவுண்டமணி - சரளா ஜோடியாக நடித்தனர். அதன் பின்னர், செந்திலுக்கு ஜோடியாக சரளா நடித்தார். வடிவேலு என்னோட படத்தில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் அவருக்கு ஜோடியாக சரளாவை நடிக்க வைக்க கேட்டேன். போங்க சார், நான் இப்போதான் கமலுக்கு ஜோடியா நடிச்சிட்டு இருக்கேன். இவன் யாருன்னே தெரியல, என்னோட மார்க்கெட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு முதலில் நடிக்க மறுத்துட்டாங்க என்றார்.
பிரிச்சுடுங்கன்னு கெஞ்சிய குடும்பம்: ஆனால், அப்படியெல்லாம் இல்லைம்மா இவன் கருப்பு நாகேஷ் போல மாறுவான். நல்ல திறமையான பையன் சேர்ந்து நடிங்க, என்னோட படங்களில் தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புத் தருவேன் என சொன்னேன். அதன் பின்னர், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச காமெடி காட்சிகள் எல்லாம் வேறலெவலில் பிச்சுக்கிட்டு போச்சு, அந்த ஜோடி பிரிக்கவே முடியாத ஜோடியாக மாறிடுச்சு, அவங்க குடும்பத்தினர் எல்லாம் எப்படியாவது இந்த ஜோடியை பிரித்து விடுங்க என்று சொல்லும் அளவுக்கு இருவரும் சினிமாவில் பிரபலமானார்கள் என பேசியுள்ளார்.

மாரீசனில் மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் வடிவேலுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. நிச்சயம் வடிவேலுவுக்கு இந்த படம் பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











