For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரியா பவானி சங்கரை Hug பண்ண சீன் எப்படி இருந்துச்சுனா? ’ஓ மணப்பெண்ணே’ ஹரிஷ் கல்யாண் ஜாலி பேட்டி!

  |

  சென்னை: 'ஓ மணப்பெண்ணே' ரிலீசாகி உள்ள நிலையில், சுடச்சுட அந்த படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் கொடுத்த பிரத்யேக பேட்டி இதோ உங்களுக்காக..

  Recommended Video

  நானும் வெட்டியா சில வருஷம் இருந்துருக்கேன் | Harish Kalyan Exclusive | Filmibeat Tamil

  அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஓ மணப்பெண்ணே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒடிடி ரிலீசாக வெளியாகி உள்ளது.

  பிரியா பவானி சங்கருடன் முதல் முறையாக ஜோடி போட்டுள்ள ஹரிஷ் கல்யாண் அவருடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி குறித்தும் அந்த 'ஹக்' சீன் குறித்தும் செம ஓப்பனாக இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

  ஹரிஷ் கல்யாண் பேட்டி

  ஹரிஷ் கல்யாண் பேட்டி

  நடிகை அமலா பால் உடன் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த பின்னர் பியார் பிரேமா காதல் எனும் ஹிட் படத்தை கொடுப்பதற்கு முன்பாக பொறியாளன், வில் அம்பு என ஏகப்பட்ட தமிழ் படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ஓ மணப்பெண்ணே படம் எப்படி என அதன் ஹீரோவே இந்த பேட்டியில் விரிவாக பல சுவாரஸ்ய தகவல்களை ஷேர் செய்துள்ளார்.

  வெர்ஷன் 2.0

  வெர்ஷன் 2.0

  பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு வெர்ஷன் 2.0வாக மாறிய ஹரிஷ் கல்யாண் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசட தபற மற்றும் ஓ மணப்பெண்ணே என வெரைட்டியான நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார்.

  நானும் வெட்டியா இருந்திருக்கிறேன்

  நானும் வெட்டியா இருந்திருக்கிறேன்

  ஓ மணப்பெண்ணே படத்தில் வரும் கார்த்தி கதாபாத்திரம் போல தான் நானும் சில வருடங்கள் வெட்டியா இருந்திருக்கிறேன் என செம ஓப்பனாக இந்த பேட்டியில் ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார். மேலும், இயக்குநர் கார்த்தியின் சொந்த கதையும் அது போன்றே இருப்பதால் இந்த படத்துடன் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கனெக்ட் ஆகிட்டோம் என்றார்.

  காதல் படமல்ல

  காதல் படமல்ல

  பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து இன்னொரு காதல் படமாக இது உங்களுக்கு அமைந்துள்ளதா? என்கிற கேள்விக்கு உடனே குறுக்கிட்டு பதிலளித்த ஹரிஷ் கல்யான் இது வெறும் ரோம் காம் எனக் கூறப்படும் காதல் படமல்ல. இந்த படத்தில் குடும்பம், நகைச்சுவை, காதல், நட்பு, தொழில் முனைவு உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு இது ஒட்டுமொத்த குடும்பமும் என்ஜாய் பண்ணி பார்க்க வேண்டிய படம் என்று தெளிவு படுத்தி உள்ளார்.

  அப்பா கதாபாத்திரம்

  அப்பா கதாபாத்திரம்

  வேலையில்லாமல் வெட்டியாக சுற்றும் மகன்களை கண்டிக்கும் அப்பா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் வேணு ஹரிஷ் கல்யாணுக்கு அப்பாவாக இந்த படத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்துவார்களா? என்றால் அது சந்தேகம் தான். இத்தனை வருடம் சீனியர் நடிகராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சி முடிந்ததும் நான் சரியாக பண்ணேனா? என கேட்பார். அந்த அளவுக்கு தொழில் பக்தி கொண்டவர் என்று பாராட்டினார் ஹரிஷ் கல்யாண்.

  சிகரெட் சீன்

  சிகரெட் சீன்

  லுங்கி கட்டிக் கொண்டு ஜாலியாக எந்தவொரு எதிர்கால சிந்தனையும் இல்லாத ஒரு இளைஞன் என்பதால் இந்த படத்தில் முதல் முறையாக சிகரெட் பிடிப்பது சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ளேன். சிகரெட் எப்போதாவது பிடிப்பேன் என்பதால், அந்த காட்சியில் நடித்த போது எந்த சிரமும் இல்லை. ஆனால், ஒரு சில காட்சிகள் தான் அப்படி இருக்கும் என No Smoking போர்டையும் போட்டு விட்டார் ஹரிஷ் கல்யாண்.

  பிரியாவுடன் ஜோடி

  பிரியாவுடன் ஜோடி

  கசட தபற படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தாலும் ஹரிஷ் கல்யாணுக்கு அவர் ஜோடியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பிரியாவுக்கு நல்லா தமிழ் தெரியும் என்னுடைய நல்ல நண்பர் நடிப்பு என்று வந்து விட்டால் அபாரமாக நடித்து அசத்தி விடுகிறார் எனக் கூறிய ஹரிஷ் கல்யாணிடம் அந்தவொரு கேள்வியையும் கேட்க, அதற்கும் அசால்ட்டாக பதில் அளித்துள்ளார் ஹரிஷ்.

  ஹக் சீன்

  ஹக் சீன்

  படத்தில் சட்டென்று பிரியா பவானி சங்கரை எந்திரிக்க சொல்லி ஹரிஷ் கல்யாண் கட்டிபிடிக்கும் காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்கிற கேள்விக்கு படத்தில் இரு இடங்களில் கட்டிப்பிடிக்கும் காட்சி வரும் முதலில் ஒரு முறை கேஷுவலாக மற்றும் கடைசியில் கிளைமேக்ஸில் எமோஷனலாக இரண்டுமே படத்திற்கு மிகவும் பலம் சேர்க்கும் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் நல்லா வொர்க்கவுட் ஆகியிருக்கும் என பளிச்சென பதில் அளித்துள்ள ஹரிஷ் கல்யாணின் பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிக் கொண்டிருக்கும் ஓ மணப்பெண்ணே படத்தையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

  English summary
  Young and talented actor Harish Kalyan opens up about hugging scene with Priya Bhavani Shankar in his recent release movie Oh Mana Penne.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X