அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி!

சென்னை: கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் நாயகன் நவீன் அளித்துள்ள கலக்கலான பேட்டி தமிழ் பிலிமிபீட் யூடியூப் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

லேட்டஸ்ட் கனவுக்கண்ணனாக நவீன் ஏகப்பட்ட பெண்களின் இதயங்களை திருடி வருகிறார்.

தல, தளபதி, தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி என ஏகப்பட்ட பிரபலங்களுடன் இவருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் இந்த பேட்டியில் சூப்பரா பேசியுள்ளார் நவீன்.

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் இதயத்தை திருடாதே. டாம் அண்ட் ஜெர்ரி காதல் போல சிவாவுக்கும் சஹானாவுக்கும் இடையே நடைபெறும் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். இந்நிலையில், அந்த சீரியல் குறித்தும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசைப்பற்றியும் நவீன் பேசியுள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

கனவுக் கண்ணன்

கனவுக் கண்ணன்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலை பெண்கள் அதிகம் விரும்பி பார்ப்பதே அந்த சீரியலின் நாயகன் நவீனுக்காகத்தான் என்றே சொல்லலாம். அவர்து ஹேர்ஸ்டைல், நேர்த்தியான பேச்சு, நடிப்பு என ஏகப்பட்ட ரசிகர்கள் நவீனுக்கு உள்ளனர்.

ஜெய் மாதிரியே

ஜெய் மாதிரியே

ஏராளமான பேர் நீங்க அப்படியே நடிகர் ஜெய் மாதிரியே இருக்கீங்க என்றும், சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கீங்க என்றும், பிரபுதேவா உறவினரா என்றும் தன்னை பார்த்து கேட்டுள்ளதாகவும் நடிகர் நவீன் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால், அவரது தனித்துவத்தை ரசித்துத் தான் அந்த சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஹிட் அடித்துள்ளது.

சிம்டாங்காரன் ஷூட்டிங்கில்

சிம்டாங்காரன் ஷூட்டிங்கில்

நடிகர் நவீனின் தந்தை பிரபல லோகேஷன் மேனேஜர். சர்கார் படத்தில் இடம்பெற்ற மாஸ் பாடலான சிம்டாங்காரன் பாடல் ஷூட்டிங்கிற்கு லோகேஷன் மேனேஜராக அவர் தந்தை இருந்த போது, 5 நாட்கள் ஷூட்டிங்கின் போதும், தளபதி விஜய்யை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல

ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல

என்னை அறிந்தால் படத்தின் ஷூட்டிங்கின் போது தல அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போ அவர் கூட பேசிய போது, எந்தவொரு விஷயத்துக்கும் அதிகமாக ரிஸ்க் எடுக்காதீங்கன்னு அட்வைஸ் பண்ணார். அசால்ட்டா எத்தனையோ படங்களில் ரிஸ்க் எடுக்கும் தல, இப்படியொரு அட்வைஸ் வளர்ந்து வரும் கலைஞருக்கு கொடுக்கிறாரே என பார்த்து வியந்தேன் என்றார்.

தனுஷ் தான் இன்ஸ்பிரேஷன்

தனுஷ் தான் இன்ஸ்பிரேஷன்

நடிக்கணும்னு உங்களுக்கு எந்த நடிகரை பார்த்து தோணுச்சு, தனுஷ் மற்றும் பகத் பாசிலுடன் நெருங்கி பணியாற்றிய நீங்கள், யாரை பார்த்து இன்ஸ்பயர் ஆனீங்க என்ற கேள்விக்கு, இதுவரைக்கும் இதை எங்கேயும் சொல்லல, தனுஷ் சார் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர் நடிச்சு சாதிச்சதை பார்த்ததும் தான் சாதாரண லுக்கில் இருந்தாலும், முயற்சி செய்தால் சாதிக்கலாம் என கற்றுக் கொண்டேன் என்றார்.

நிறைய சொல்லித்தருவார்

விஜய்சேதுபதிக்கும் எனக்கும் 7 வருஷ நட்பு இருக்கு.. எப்போ போனாலும், எப்போ பார்த்தாலும், நடிப்பை பத்தியும், சினிமாவை பத்தியும் நிறைய சொல்லித்தருவாரு என ரொம்பவே சிம்பிளாகவும், சிரிச்சிக்கிட்டே ஒவ்வொரு கேள்விக்கும் நடிகர் நவீன் சுவாரஸ்யமா பதில் அளித்துள்ள இந்த பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X