Exclusive: போலீஸ்காரங்க செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.. நான் எப்பவுமே நானா இருப்பேன்.. அபிஷேக் பேட்டி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அபிஷேக் ராஜா அளித்துள்ள பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டது அபிஷேக் ராஜா தான்.
பிக் பாஸ் வீட்டில் கிடைத்த நண்பர்கள் மற்றும் வெளியே கிடைக்கும் அங்கீகாரம், நெட்டிசன்கள் திட்டு உள்ளிட்ட அனைத்தையும் பற்றி விரிவாக பேசியுள்ள பேட்டி 3 பாங்களாக வெளியாகி உள்ளன.
சந்தோஷமா இருக்கேன்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டோமே என வருத்தப் படுறீங்களா என கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லைங்க வெளியே வந்து ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். பலரும் என்னை அடையாளம் கண்டு கொள்வதும், என்னை வரவேற்பதும் நல்லா தான் இருக்கு.
போலீஸ் உடன் செல்ஃபி
கார் எடுத்துக் கொண்டு மசாஜ் சென்டருக்கு போனேன். போகும் போது தப்பா ஒரு யூடர்ன் அடிச்சிட்டேன். 4 போலீஸ்காரங்க மடக்கி பிடிச்சிட்டாங்க.. மாஸ்க்கை கழட்டியதும் ஐ.. அபிஷேக் ராஜா என சொல்லி என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். எந்த சலுகையும் வேண்டாம் சார் என்ன ஃபைனோ சொல்லுங்க கட்டுறேன்னு சொன்னேன் என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசியுள்ளார்.
நான் நானாகத்தான் இருப்பேன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சில மீம்ஸ்கள் பார்த்தேன். சிலர் அட்வைஸ் செய்தனர். நான் நானாகத்தான் எப்போதுமே இருப்பேன். இந்த உலகத்துக்காக நம்மை மாற்ற வேண்டும் என்றால் மாற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும். நாம நாமாகவே இருந்தால் உலகம் ஒருநாள் நமக்காக மாறும் என்பதை நம்புபவன் நான் எனக் கூறியுள்ளார்.

மதுமிதாவை வளர்க்கப் போறேன்
பிரியங்கா எனக்கு சரியான ஃபிரண்ட் சார். அவ இல்லாமல் நான் வாழவே முடியாதுன்னு தோணுது. வெளியே வந்த பிறகும் நிச்சயம் அவள் நல்ல தோழியாக இருப்பாள் என்றே எண்ணுகிறேன். மதுமிதா எனக்கு குழந்தை மாதிரி அவங்க அப்பா அம்மாவுக்கு மெயில் போடலாம் என இருக்கிறேன். உங்க பொண்ணை என் கிட்ட கொடுத்துடுங்க கொஞ்ச நாள் வளர்த்துட்டு தரேன்னு ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் மனம் திறந்து ஓப்பனாக அபிஷேக் ராஜா பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











