பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னை: களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்துள்ள நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

Recommended Video

ரொம்ப கோவக்காரனா இருந்தவன் நான் | ACTOR ARULNITHI CHAT PART-01 | FILMIBEAT TAMIL

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் களத்தில் சந்திப்போம்.

கபடி போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாறாத ரிங்டோன்

மாறாத ரிங்டோன்

டிமான்டி காலனி, கே 13 என தொடர்ந்து திரில்லர் படமாக நடித்து வந்த நடிகர் அருள்நிதி, மீண்டும் மண் சார்ந்த கமர்ஷியல் கதையில் நடித்துள்ளார். களத்தில் சந்திப்போம் படம் வெளியாவதை முன்னிட்டு அவர் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியில், கடந்த 10 வருடமாக வம்சம் படத்தில் ஒவ்வொரு வம்சமாக அழைக்கும் பாடல் தான் தனது ரிங்டோனாக உள்ளது எனக் கூறினார்.

ரொம்ப கோவக்காரன்

வம்சம் படத்தில் அம்மாவுக்கு செய்த சத்தியத்தால் சண்டைக்கு போகாமல் இருக்கும் பிள்ளையாக நடித்திருப்பார். மெளனகுரு படத்திலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரியல் லைஃபில் நீங்க சாதுவா? கோவக் காரரா என்கிற கேள்விக்கு நான் ரொம்ப கோவக்காரன் தான். ஆனால், வெப்பன்ஸ்லாம் யூஸ் பண்ண மாட்டேன் என செம ஜாலியாக பேசி உள்ளார்.

ஆப்பிள் பாக்ஸ் உடன்

ஆப்பிள் பாக்ஸ் உடன்

நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் நன்கு உயரமான ஒரு ஹீரோ. உங்களுடன் நடிக்க நடிகைகள் எல்லாம் ரொம்ப சிரமப்படுவார்களே என்கிற கேள்விக்கு, ஆமாங்க, அதனால எப்போவுமே ஷூட்டிங் போகும் போதே ஒரு ஆப்பிள் பாக்ஸை எடுத்துட்டு போய் அவங்களுக்கு கிஃப்ட்டா கொடுத்துடுவேன். அடுத்த 40 நாட்களுக்கு யூஸ் ஆகும்னு சொல்லிடுவேன்.

பிரியாவுக்கு தேவைப்படல

பிரியாவுக்கு தேவைப்படல

ஆனால், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் உங்க ஹைட்டுக்கு ஈடு கொடுத்தாரா? என்ற கேள்விக்கு பிரியா பவானி சங்கர் நல்ல ஹைட். அவங்களுக்கு எந்தவொரு ஆப்பிள் பாக்ஸும் தேவையில்லை. அவங்க கூட நடிக்கத் தான் மத்தவங்களுக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவைப்படும் என செம ஜாலியாக பேசியுள்ளார் அருள்நிதி.

ஜீவா எப்படி

ஜீவா எப்படி

ஜீவாவின் சொந்த தயாரிப்பான சூப்பர் குட் பிலிம்ஸில் நடித்த அனுபவம் ரொம்பவே நல்லா இருந்தது. கபடி போட்டியை மையப்படுத்திய படம் என்பதால், உங்க பிசிக் ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டியது மட்டுமின்றி, கேமரா மேனிடம் அருளுக்கு இப்படியெல்லாம் ஷாட்ஸ் வைங்க நல்லா இருக்கும் என்றார். ஷுட்டிங்கிலும் என்ன ரொம்ப இம்ப்ரொவைஸ் பண்ணார் என்று பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X