Arya Exclusive: பாக்ஸிங் படத்துல சீட் ஷாட் அதிகமா வைக்க முடியாது.. குத்தெல்லாம் ரியலா விழும்!
சென்னை: வரும் ஜூலை 22ம் தேதி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைமில் வெளியாகிறது.
Recommended Video
காட்டுத் தனமாக உடம்பை ஏற்றி பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.
பாக்ஸிங் படத்தில் நடித்துள்ள நடிகர் ஆர்யா அந்த படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் எக்ஸ்க்ளூசிவ் ஆக பகிர்ந்து கொண்டுள்ள பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

டைம் டிராவல்
வடசென்னையில் 1975ம் ஆண்டு எப்படி இருந்ததோ அப்படித்தான் சார்பட்டா பரம்பரை படத்தின் செட் இருக்கும். எங்களுக்கான காஸ்ட்யூம், ஸ்லாங் என அப்படியே 1975ம் வருஷத்துக்கு டைம் டிராவல் பண்ண மாதிரி தான் மொத்த படத்தின் ஷூட்டிங்கிலும் நாங்க அனைவருமே நடித்திருந்தோம். ஆர்ட் வொர்க் எல்லாம் ரொம்பவே ஆராய்ச்சி பண்ணி பண்ணியிருந்தாங்க என்றார் ஆர்யா.

கையை தூக்கவே முடியாது
இந்த படத்திற்காக 3 மாசம் பாக்ஸிங் பயிற்சி செய்தோம். தேசிய அளவிலான குத்துச் சண்டை வீரர்களை வைத்து எங்களுக்கு ரஞ்சித் சார் பயிற்சி கொடுக்க வைத்தார். நாளெல்லாம் டிரெயினிங் பண்ணிட்டு வீட்டுக்கு போன கையை தூக்கவே முடியாது.

மூஞ்சில குத்து விழும்
மற்ற படங்களை போல பாக்ஸிங் படத்தில் சீட் ஷாட் எல்லாம் அதிகமா வச்சு எடுக்க முடியாது. மூஞ்சில குத்துற ஷாட் எல்லாம் குத்து வாங்கித் தான் ஆகணும். நானும் வாங்கியிருக்கேன். நானும் மத்தவங்கள ரியலா குத்தியிருக்கேன். மவுத் கார்ட் எல்லாம் போடாமல் நடிச்சா பல் எல்லாம் பறந்துடும்.

டெடி டிஆர்பி
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படம் சமீபத்தில் டிஆர்பியில் இதுவரை ப்ரீமியர் செய்யப்பட்ட படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது பற்றிய கேள்விக்கு, டெடி படம் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த படத்திற்கு இப்படியொரு அன்பு செலுத்துவார்கள் என்பது எனக்கே ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் தான் உள்ளது என நன்றி தெரிவித்தார்.
அரசியல் இருக்காது
பா. ரஞ்சித் சார் படங்கள் என்றாலே மறைமுகமான குறியீடுகளும் அரசியலும் அதிகளவில் இருக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறதே, உங்க படத்துல அது எந்த அளவுக்கு இருக்கு என்கிற கேள்விக்கு, சார்பட்டா படத்தில் ரஞ்சித் சாரின் அரசியல் இருக்காது என ஆர்யா பதில் அளித்துள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள். ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் சார்பட்டா படத்தை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











